புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

தமிழர்களுக்காக குரல் கொடுத்த மனித உரிமை செயற்பாட்டாளரை விடுதலை செய்யுமாறு மலேசியாவிடம் கோரிக்கை

இலங்கைத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளரை விடுதலை செய்யுமாறு மலேசிய அரசாங்கத்திடம்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட திரைப்பட இயக்குனர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலரும் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த மனித உரிமை செயற்பாட்டாளருக்கு எதிராக மலேசிய நீதிமன்றில் வழக்கு விசாரணை செய்யப்பட உள்ளது.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை யுத்தம் தொடர்பிலான செனல்4 ஊடகத்தின் ஆவணப்படமொன்றை காட்சிப்படுத்தியமையே குறித்த மனித உரிமை செயற்பாட்டாளர் மீதான குற்றச்சாட்டாகும்.
லென ஹென்றி என்ற மனித உரிமை செயற்பட்டாளரே இவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த மனித உரிமை செயற்பாட்டாளருக்கு எதிரான வழக்கினை தள்ளுபடிசெய்யுமாறு மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிச்சம் போட்டுக் காட்டியமையை பெருமிதமாக கருதுவதாகவும் தமக்கு ஆதரவு வழங்கிய தரப்பினருக்கு நன்றி பாராட்டுவதாகவும் லென ஹென்றி தெரிவித்துள்ளார்.

ad

ad