புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2016

தினமும் 1 மணி நேரம் மக்கள் குறைகளை கேட்க இன்ஸ்பெக்டர்களுக்கு கமிஷனர் உத்தரவு

சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை, ஒரு மணி நேரம் இன்ஸ்பெக்டர்கள்
பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை வாங்கி உடனடியாக சி.எஸ்.ஆர். ரசீது கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்ஸ்பெக்டர்கள் முக்கியமான பணிக்கு சென்றிருந்தால் பொதுமக்களை சந்திப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இன்ஸ்பெக்டர்கள் இந்த பணியை சிறப்பாக செய்கிறார்களா? என்பதை கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும்.

* சென்னை நகரில் வசிக்கும் முதியோர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் தங்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை பதிவு செய்துகொண்டு தங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் போலீஸ் நிலையங்களை அணுகினால் முதியோர்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்ற திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அந்த திட்டம் தற்போது சரிவர செயல்படாமல் இருப்பதாக புகார்கள் வந்தன. முதியோர்களுக்கு உதவி செய்யும் இந்த திட்டத்தை மீண்டும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.  

* சென்னை நகர போலீஸ் நிலையங்களின் எல்லைகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிற்கும் 24 மணி நேரமும் ரோந்து செல்ல ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டனர். அவர்கள் ரோந்து செல்வதற்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டமும் தற்போது சரிவர செயல்படாமல் இருப்பதாக புகார்கள் வந்தன. பொதுமக்களின் நலன் கருதி இந்த திட்டத்தையும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

* ரோட்டில் சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. மேலும் ரூபாய் நோட்டுகளை ரோட்டில் வீசி கவனத்தை திசை திருப்பி பொதுமக்களிடம் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் சென்னையில் நிறைய நடக்கிறது.

இதுபோன்ற சம்பவங்களில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரசார குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு சினிமா தியேட்டர்களில் திரையிட்டும், தொலைக்காட்சிகளில் வெளியிட்டும் பிரசாரம் செய்யும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. அந்த திட்டமும் தற்போது செயல்பாட்டில் இல்லை. இந்த திட்டத்தையும் கூடுதல் கமிஷனர்கள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார்

ad

ad