புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2016

வீசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த மோடி

 தனக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க செய்துள்ளது அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நிகழ்த்திய
வரலாற்று சிறப்பு மிக்க உரை. மோடி நிகழ்த்திய உரைக்கு அவருக்கு மட்டுமின்றி, இந்தியா முழுவதற்கும் உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
5 நாடுகள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அங்கு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். பயங்கரவாதம், பாதுகாப்பு, பொருளாதார நட்புறவு உள்ளிட்டவைகள் குறித்து 45 நிமிடங்கள் அவர் நிகழ்த்திய உரைக்கு 64 முறை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும் கைதட்டு அடங்குவதற்கு 4 நிமிடங்களுக்கு மேலானது. இதில் 9 முறை அனைவரும் எழுந்து நின்று மோடிக்கு மரியாதை தெரிவித்தனர். மோடி தனது உரையின் போது 13 முறை நட்புறவு என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்.
2000ம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் நிகழ்த்திய உரையை கேட்டு, இந்திய எம்.பி.க்கள் அவரிடம் சென்று ஒட்டோகிராப் வாங்கினர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி நிகழ்த்திய உரையை கேட்ட உறுப்பினர்கள் அனைவரும் மோடியை தேடி வந்து கைகுலுக்கி பாராட்டியதுடன், ஒட்டோகிராப்பும் வாங்கிச் சென்றனர். உண்மையில் இது இந்திய பிரதமர் ஒருவருக்கு கிடைத்த பாராட்டாக பார்க்கப்படவில்லை ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் கிடைத்த பாராட்டாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்தியர் ஒருவருக்கு இந்த அளவிற்கு பாராட்டு கிடைத்துள்ளது விவேகாந்தருக்கு (சிகாகோ மாநாட்டு உரையின் போது) பிறகு பிரதமர் மோடிக்கு தான்.
மோடியின் உரை குறித்து இந்தியா டுடே பத்திரிகையில் கருத்து தெரிவித்துள்ள பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மோடியை பேட்டி எடுக்க சென்ற போது அவரை ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டேன். அதற்கு மறுத்த மோடி, இந்தியிலேயே பேட்டி அளித்தார். பின்னர் அவர் என்னிடம், இன்று வேண்டுமானால் நான் இந்தியில் பேசலாம். ஆனால் ஒருநாள் உங்களை விட நன்றாக ஆங்கிலத்தில் பேசுவேன் என்றார். தற்போது அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மோடி நிகழ்த்திய உரையை கேட்ட பிறகு அன்று அவர் கூறியதை உண்மை என ஏற்றுக் கொள்கிறேன் என்றார். 

ad

ad