புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2016

விளையாட்டுக் கழகத்திற்கு தடை கண்டித்து மன்னாரில் ஊர்வலம்

மன்னார் பள்ளிமுனை சென்-லூசியஸ் விளையாட்டுக்கழகத்திற்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து மன்னார் பள்ளிமுனை கிராம மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை)
மன்னாரில் கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர். சுமார் 50 ஆண்டுகள் பழமையான குறித்த விளையாட்டு கழகத்திற்கு போட்டிகளில் கலந்துக்கொள்ள மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஆறு மாதக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை போலிக் குற்றச்சாட்டு சுமத்தி குறித்த கழகத்தின் கோல் காப்பாளருக்கு ஒரு வருடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உத்தரவை கண்டித்து பள்ளிமுனை கிராமத்தில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான கிராம மக்கள், அபிவிருத்திக்கு குரல் கொடுக்கும் மன்னார் அரசியல் வாதிகளே இவ் அநீதிக்கு குரல் கொடுங்கள், எமது கழகத்தின் வெற்றிக்கு தடை விதிக்காதே, எமது விளையாட்டை வளர விடு, எமது கிராமத்தின் உயிர்மூச்சு உதைப்பந்தாட்டமே அந்த மூச்சை நிறுத்தாதே போன்ற வாசங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு மன்னார் மாவட்டச் செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
பள்ளிமுனை பெருக்க மரத்தடியில் ஆரம்பமான ஊர்வலம் பிரதான வீதியூடாக மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்தது. பின்னர் பள்ளிமுனை கிராம பிரதிநிதிகள் சிலர் மாவட்டச் செயலகத்தினுள் சென்று தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேலிடம் கையளித்ததோடு, குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

ad

ad