புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2016

சென்னையில் வழுக்கை தலையில் முடி மாற்றும் சிகிச்சை : டாக்டர் பரிதாப பலி

அழகுக்கலை என்ற பெயரில்,சென்னையில், 'ஹேர் டிரான்ஸ்பிளான்ட்' எனப்படும், வழுக்கை தலையில் முடி மாற்றும் சிகிச்சை செய்த டாக்டர், அடுத்த நாளே பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 இதற்கு காரணமான, சென்னையில் உள்ள, ஏ.ஆர்.எச்.டி., என்ற அழகு மையத்தை இழுத்து மூடிய அரசு, மருத்துவக் கவுன்சில் மூலமாக, விதிகளுக்கு முரணாக செயல்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளையும் முடுக்கி விட்டுள்ளது.

'வழுக்கை தலையா... கவலை வேண்டாம்; அரை மணி நேரத்தில் தீர்வு கிடைக்கும்' என்பது போன்ற விளம்பரங்கள், நகரங்களில் மட்டுமின்றி குக்கிராமங்கள் வரை பரவிவிட்டன.

  பெண்கள், 'சிக்கு' முடி வைத்து அலங்காரம் செய்து கொள்வது போல ஆண்களுக்கு விரும்பிய வடிவத்தில், 'விக்' வைத்தல், 'விக்'கை தலையில் ஒட்டிக் கொள்ளுதல் என்ற நிலையைத் தாண்டி, இதய மாற்று சிகிச்சை போல், 'ஹேர் டிரான்ஸ்பிளான்ட்' எனப்படும் முடி மாற்று சிகிச்சையும், சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது.

  இதற்காக, பிரபலமான மருத்துவமனைகளில் மட்டுமே, 'காஸ்மெட்டிக்' பிரிவு செயல்பட்டு வந்தது. தற்போது, சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்கள் வரை, பல நிறுவனங்கள் நவீன, 'பியூட்டி பார்லர்'களாக, இந்த மையங்களை துவங்கிவிட்டன.

  நவ நாகரீக உலகில், அழகுக்கலையில் பெண்களுக்கு இருந்த ஆர்வத்தை மிஞ்சும் வகையில், ஆண்களும் விபரீதம் பற்றி கவலைப்படாமல் இந்த மையங்களை நாடி வருகின்றனர். இப்படி, வழுக்கை தலையில் முடி மாற்றும் சிகிச்சை செய்த டாக்டர், அடுத்த நாளே, 'அலர்ஜி' ஏற்பட்டு இறந்த கொடூரம் சென்னையில் நடந்துள்ளது.

ad

ad