புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2016

இராணுவத்தினர், பொதுமக்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை

சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துத் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

வெடிவிபத்து இடம்பெற்றபோது, சலாவ இராணுவ முகாமில் இருந்த இராணுவத்தினரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர்.

சலாவ இராணுவ முகாமில் இருந்த 30 இராணுவத்தினரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ள அதேவேளை, முகாமுக்கு அருகில் இருந்த மக்களிடம் இருந்து நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகளும், அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad