புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2016

எட்டு முதலமைச்சர்களும் வெளியேறக் கோரினால் இராணுவத்தின் நிலை என்ன?

வடமாகாண முதலமைச்சரைப் போன்று ஏனைய எட்டு மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் தமது மாகாணங்களிலிருந்து
இராணுவத்தினரை வெளியேற்றுமாறு கோரினால் இராணுவத்தினரை எங்கே தங்கவைப்பது என மஹிந்த ஆதரவு அணி ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு வடமாகாண முதலமைச்சர் கோரியுள்ளார். இதேபோன்று ஏனைய மாகாண முதலமைச்சர்களும் கோரினால் இராணுவத்தை கலைத்துவிட்டு, கடற்படையினரை கப்பல்களிலும், விமானப் படையினரை விமானங்களிலுமா வைத்திருப்பது என அவர்கள் வினவினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கேள்விகளை முன்வைத்தார். இராணுவத்தினர் வசமிருக்கும் காணிகளை அபகரித்து அவற்றை மக்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.
ஏனைய மாகாணங்களைவிட வடக்கில் கூடுதலான இராணுவத்தினரை வைத்திருப்பதற்கு பத்துக் காரணங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், அவை ஒவ்வொன்றையும் விளங்கப்படுத்தினார். 12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூக மயப்படுத்தப்பட்டுள்ளனர். ஆயுதமேந்தி போராடியவர்கள் மீண்டும் ஆயுதமேந்தி போராடிய மோசமான அனுபவத்தைக் கொண்ட நாடு. கோடிக்கணக்கான பணம் செலவு செய்து சகல அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தியே வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்றி வேறிடங்களுக்கு மாற்றுவதாயின் மேலும் பல கோடி ரூபா பணம் செலவாகும். இதுபோன்ற பல்வேறு காரணிகள் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். 

ad

ad