புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2013

சுவிசில் சிறப்புற இடம்பெற்ற பொன்.சுந்தரலிங்கத்தின் இசைக்கோலங்கள் 
 கடந்த 06.09.2013 வெள்ளியன்று மாலை  சுவிஸ் பேர்ன் நகரில் பிரபல தமிழீழ எழுச்சி பாடகர் பொன் -சுந்தரலிங்கம் அவர்களின் இசைக்கோலங்கள் என்னும் நிகழ்வு பல நூற்றுக்கணக்கான  மக்கள் மத்தியில் சிறப்பாக இடம் பெற்றது கசெரிக்குபக்கவதியன்களை இலங்கை இந்திய கலைஞர்கள் வழங்கி மெருகூட்டி இருந்தார்கள் .ஜெயா தொலைக்காட்சி அனுசரணையுடன் தயாரிக்கப்பட்ட .யாழ் இளம்கலை மன்ற ஸ்தாபகரும் வானொலி தொலைக் காட்சி புகழ் கர்நாடக சங்கீத விற்பன்னருமான ,பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் ஜெயா தொலைக்காட்சி அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டகானாமிர்தம் ஒளித்தட்டு ஒன்றும் அந் நிகழ்வில் வெளியிட்டு வைக்கபட்டது. இந்த ஒலித்தட்டினை சுவிசின் வர்த்தகர்களான  இம்போர்ட் தாஸ் உரிமையாளர்,   சு.ஸ்ரீதாஸ் அவர்களும் மற்றும் சாய் ரேடர்ஸ் உரிமையாளர் இ.ரவீந்திரன் அவர்களும்  பெற்றுக்கொண்டனர்.விழாவில் நடனநிகழ்வுகள் ,சிறப்புரைகளும் இடம்பெற்றன . ஆன்மீக சொற்பொழிவாளர் தி.ஸ்ரீஸ்கந்தராசா ,கவிஞர் மதி,எஸ்.கருணாமூர்த்தி,அ .நிமலன்.செ.சுரேஷ்  ஆகியோரது வாழ்த்துரைகளும் பேச்சுக்களும் நிகழ்வுற்றன .புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் புகழ்பெற்ற இந்திய மற்றும்   ஈழத்துக்கலைஞர்களோடு இணைந்து, களத்திலும் புலத்திலும் பல பாடல்களைப்   பாடியுள்ளார்.பல நூற்றுக்கணக்கான இளம்பராயத்தினருக்கு சங்கீத வகுப்புக்களை நடாத்திவருவதுடன்   புலம் பெயர் நாடுகளில் தனது சங்கீத பணிகளையும் ஆற்றிவருகின்றார்.(நன்றி, நிழல்படம்- கதிரவன் )

கண்டியை குழப்பும் சேவலை ஏன் நுவரெலியாவில் காணவில்லை ? ஆறுமுகன் பதில் கூற வேண்டும் : மனோ

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டியில் சேவல் சின்னத்திலும், நுவரெலியாவில் வெற்றிலை சின்னத்திலும் போட்டியிடுகின்றது.
 காணிகள் பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைவாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாகவும் உயர்பாதுகாப்பு வலயத்தில் விமானத்தளம் மற்றும் துறைமுக
நவியின் கருத்துக்கு அதிருப்தி ஐ.நா.செயலருக்கு அரசு கடிதம்; வெளிவிவகார அமைச்சின் மூலம் உத்தியோகபூர்வ நடவடிக்கை 
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் நவ நீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் முன்வைத்த கருத்துகளுக்குக் கடும் ஆட்சேபனையை வெளியிட்டு ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு கடித மொன்றை அனுப்புவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் 140,000க்கு மேற்பட்ட எம்மக்கள் பூண்டோடு அழிக்கப்பட்டார்கள். காணாமல் போனார்கள். அவர்களுக்கு ஒரு நீதி விசாரணை வேண்டும். அது இலங்கை அரசால் சொல்லப்படுகின்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் நடாத்தப்படும் விசாரணயல்ல. அது ஒரு பன்னாட்டு விசாரணையாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்கின்றோம்.சி.சிறீதரன் 
பாராளுமன்ற உறுப்பினர்
“விடுதலைப் புலிகள் போராடி என்ன கண்டார்கள், முள்ளிவாய்க்காலில் மக்களைக் கொண்டு சென்று விட்டார்கள்” என்று சிலர் சொல்கிறார்கள்.
மோடியை பிரதமராக எங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது: திருமாவளவன்

புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள ஆதிங்கம்பட்டு கிராமத்தில் அம்பேத்கர் முழுஉருவ வெண்கலசிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு
சென்னையில் விநாயகர் ஊர்வலம் : 10 ஆயிரம் போலீசார் குவிப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக சென்னையில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட உள்ளனர். நாளை விநயாகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ஒத்திவைப்பு : ஜெ., அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக முதல்வரும், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். 
அரச வங்கியொன்றில் சதம் சதமாக 80 லட்ச ரூபா கொள்ளை?
அரச வங்கியொன்றில் சதம் சதமாக 80 லட்ச ரூபா வாடிக்கையாளர் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.கடந்த ஆறு ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட வேண்டிய தொகைகளின் சதக் கணக்குகள் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட கொழும்பு வாழ் தமிழர்களுக்கு அவசர அழைப்பு
நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடைய தலைநகர் கொழும்பில் வசிக்கும் - வாக்காளர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை ஏற்பாடு செய்துள்ளது.
1நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அளிந்து இருந்தார். மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார். தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான ‘அ’ பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை 10 மணியளவில் பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணி வித்தார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

8 செப்., 2013

அமெரிக்க ஓபன் டென்னிஸ்  இரட்டையர் ஆண்கள் சுற்றில் இந்திய வீரர் லாந்தர் பாயாஸ் செக் நாட்டு வீரர் ச்டேபாநேக் உடன்  சேர்ந்து வெற்றி பெற்று உள்ளார்.பாசுக்கு வயது 40  .இந்த வயதில் இவர்  கிராண்ட்ஸ்லாம் சுற்றினை வென்றது பரபரப்பாக பேசப் படுகிறது 
அமெரிக்க ஓபன்: பெண்கள் இரட்டையர் போட்டியில் செக் குடியரசின் ஆண்டிரியா ஜோடி சாம்பியன்
அமெரிக்க ஓபன்: பெண்கள் இரட்டையர் போட்டியில் செக் குடியரசின் ஆண்டிரியா ஜோடி சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் போட்டியின் இறுதிப்போட்டி நியூயார்க்கின் யூ.எஸ். டி.ஏ. பில்லி ஜீன் கிங் நேசனல் 
டென்னிஸ் சென்டரில் நேற்று நடைபெற்றது. இதில் வில்லியம்ஸ் சகோதரிகளை தோற்கடித்த உலகின் 5-ம் நிலை ஆட்டக்காரர்களான 
செக் குடியரசு நாட்டின் ஆண்டிரியா
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் இன்று நடந்தது

நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். 

மனித உரிமைப் பேரவை பருவகால அமர்வு நாளை ஆரம்பம்! இலங்கை விஜயம் தொடர்பிலும் நவிபிள்ளை பிரஸ்தாபிக்கிறார்

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வுகள் நாளை 9 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ஜெனீவாவில்

பழ.நெடுமாறன் தலைமையில் சீமான் திருமணம்
திரைப்பட இயக்குநரும், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும், மறைந்த முன்னாள் தமிழக அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகருமான
சீமானின் திருமணம் சென்னையில் இன்று நடைபெறுகிறது: பல முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருமணம் இன்று சென்னையில் நடக்கிறது.
மூன்று மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை - பல்கலைக்கழக உள்வாங்கல்கள் தொடர்பான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியாகும்
எதிர்வரும் மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை திங்கட்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறவுள்ளது.
நாட்டை பிளவுபடுத்துவதோ, குந்தகம் ஏற்படுத்துவதோ எமது நோக்கமல்ல! தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து சம்பந்தன்!
நாங்கள் மக்கள் மத்­தியில் ஒரு­போதும் தவ­றான கருத்­துக்­களை விதைக்­க­வில்லை. எமது தேர்தல் விஞ்­ஞா­பனம் நாட்­டுக்கு குந்­தகம் ஏற்­ப­டுத்தும் வகை­யிலோ, நாட்டைப் பிளவு­ப­டுத்தும் வகை­யிலோ அமை­ய­வில்லை என தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் யாழ்.நகர தேர்தல் பிரசாரச் சந்திப்பிற்கு பெரும் வரவேற்பு வழங்கிய வர்த்தகர்கள்!
தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ்.நகர தேர்தல் பிரசாரச் சந்திப்பிற்கு நகர வர்த்தகர்கள் பெரும் வரவேற்பு வழங்கியுள்ளதுடன், தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் அனைவரும் வேட்பாளர்களுக்கு மா லை அணிவித்து கௌரவம் வழங்கியுள்ளனர்.

ad

ad