புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2013

நவியின் கருத்துக்கு அதிருப்தி ஐ.நா.செயலருக்கு அரசு கடிதம்; வெளிவிவகார அமைச்சின் மூலம் உத்தியோகபூர்வ நடவடிக்கை 
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் நவ நீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் முன்வைத்த கருத்துகளுக்குக் கடும் ஆட்சேபனையை வெளியிட்டு ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு கடித மொன்றை அனுப்புவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

 
அடுத்தவாரமளவில் வெளிவிவகார அமைச்சினூடாக இந்தக் கடிதத்தை அரசு, ஐ.நா. செயலாளருக்கு அனுப்பவுள்ளது என்று தெரியவருகிறது.
 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு ஏற்கனவே நிராகரித் திருந்தாலும்,  ஆட்சேபனையை உத்தியோகபூர்வமாக வெளியிடும் முகமாகவே ஐ.நாவுக்கு கடிதம் எழுதப்படவுள்ளது.
 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அரசு முழு சுதந்திரத்தை வழங்கியிருந்த நிலையில், அவர் தனது அதிகாரத்துக்கு அப்பால் சென்று முன்னெடுத்த நடவடிக்கைகளையும் இலங்கை அரசு பட்டியலிடவுள்ளது என்று அறியமுடிகின்றது.
 
பயண நிகழ்ச்சி நிரலுக்கு மாறான வகையில் முள்ளி வாய்க்காலில் மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்டமை, திருமலையில் நடத்திய இரகசிய சந்திப்பு ஆகியன உள்ளிட்ட விடயங்கள் பட்டியலில் இடம்பெறலாம் என அரச வட்டாரங்கள் குறிப்பிட்டன.
 
ஒருவார கால பயணம் மேற் கொண்டு கடந்த 25 ஆம் திகதி  இலங்கை வந்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடந்த 31 ஆம் திகதி கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்தினார்.
 
"இலங்கை அரசு எதேச்சாதிகார பாதையை நோக்கி பயணிக்கின்றது.  மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப் பட வேண்டும். வடக்கில் சிவில் செயற்பாடுகளில் இராணுவத் தலையீடுகள் ஓங்கியுள்ளன. 
 
சாட்சியங்களை பாதுகாப்பு தரப்பு மிரட்டுகின்றது'' என பல்வேறு கருத்துகளை இதன்போது அவர் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=168742282909673668#sthash.231wU4O8.dpuf

ad

ad