புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2013

மூன்று மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை - பல்கலைக்கழக உள்வாங்கல்கள் தொடர்பான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியாகும்
எதிர்வரும் மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை திங்கட்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறவுள்ளது.
பிரதித் தபால் மா அதிபர் ஏ.ஜி.விக்ரமசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வாக்காளர் அட்டை விநியோகிப்பதற்கான விசேட தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாணங்களுக்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படுகின்றன.
எதிர்வரும் 13ம் திகதிவரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதித் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக உள்வாங்கல்கள் தொடர்பான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியாகும்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வெட்டுப்புள்ளியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ஷனிகா ஹிரும்புரேகம தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டு உயர்தர பரீட்சை முடிவுகள் அடிப்படையில் தகுதிபெற்ற மாணவர்களுக்கு வெட்டுப்புள்ளி வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
2013 ஆம் கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகத்திற்கு 24,000ற்கும் அதிகமான மாணவர்களை உள்வாங்கிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்பட்ட பின் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர் என ஆணைக்குழுத் தலைவர் க்ஷ்னிகா ஹிரும்புரேகம குறிப்பிட்டார்.

ad

ad