புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2013

சீமானின் திருமணம் சென்னையில் இன்று நடைபெறுகிறது: பல முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருமணம் இன்று சென்னையில் நடக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகின்றார்.
சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் அரணையூர் ஆகும்.
செந்தமிழன்-அன்னம்மாள் தம்பதிக்கு மூத்த புதல்னாக பிறந்த சீமானுக்கு, 2 சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் காளிமுத்து மற்றும் மனோகரி தம்பதியின் புதல்வி கயல்விழியை இன்று திருமணம் செய்து கொள்கிறார்.
மணமகள் எம்.ஏ. பட்டம் பெற்றவர். இவர்களது திருமணம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் காலை 9.00 முதல் இடம்பெற்று வருகின்றது.
சீமான்-கயல்விழி ஆகியோரின் திருமணம் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு முன்னிலை வகிக்கிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் இணைந்து செய்துள்ளனர்.
திருமண விழாவில், அரசியல் பிரமுகர்களும், திரை உலகத்தினரும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.
இவர் நடிகர் பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். தம்பி படத்தின் மூலம் தமிழ் சினிமாத்துறையில் தனக்கென ஒரிடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

ஆரம்ப நாட்களிலிருந்தே தமிழ் உணர்வாளராகவும், தமிழருக்கு எதிரான நிகழ்வுகளுக்கு திடமாகக் குரல் கொடுப்பவராகவும் சீமான் இருந்து வந்துள்ளார்.

குறிப்பாக ஈழப் பிரச்சினையில் உறுதியாகக் குரல் கொடுத்தார். தமீழழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனை நேரில் சந்தித்த பிறகு, அவரது தம்பிகளுள் ஒருவராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

ad

ad