புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014


உலக வரைபடத்தில் இலங்கை எங்கு இருக்கிறது என்பது தெரியாதவர்களே அமெரிக்க காங்கிரஸில்

ஊடகங்களின் தலைமை அதிகாரிகளிடம் ஜனாதிபதியின் செயலாளர்

உலக வரைபடத்தில் இலங்கை எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை தெரிந்துகொள்ளாத, பொது அறிவு இல்லாத அமெரிக்க காங்கிரஸின் ஓர் உறுப்பினர் இலங்கைக்கு எதிராக கண்டனப் பிரேரணையை முன்மொழிவதற்கு தலைமை தாங்கியிருக்கிறார் என ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.


 கொழும்பு கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 13ந் திகதி ஆரம்பமான போது ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி கோவிலிலிருந்து கம்பன் திருவுருவப் படம் இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி ஊர்வலமாக வருவதையும், ஊர்வலத்தில் கலாநிதி கு. சோமசுந்தரம், சங்கீத பூஷணம் சு. கணபதிப்பிள்ளை, இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர், அ. ஆரூரன், சுவாமி ராஜேஸ்வரானந்த மகராஜ், கம்பன் கழக தலைவர் தெ. ஈஸ்வரன், திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபை தலைவர் வி. கயிலாசபிள்ளை ஆகியோரை படத்தில் காணலாம்.
 

அனந்தி சசிதரனின் ஜெனிவா பயணம் நாட்டுக்கு விபரீதமாகவே அமையும்!- வசந்த பண்டார
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஜெனிவா பயணம் நாட்டுக்கு விபரீதமாகவே அமையும். தனது உரிமையை நாட்டுக்கு எதிராக அனந்தி பிரயோகிப்பது நிச்சயமாகும். இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்! ஓய்வுபெற்ற சாரதிகளுக்கு அழைப்பு! தேர்தல் வேளையில் அரசு கலக்கம்
இலங்கையில் ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் நேற்றும் அநேகமான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு, இதனால் பயணிகள் பல்வேறு அசெளக ரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.

மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக அறிக்கை
இலங்கை, மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக போலி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குவேனியின் சாபத்தில் இருந்து மீள ஆலயம் கட்டும் சிங்களவர்கள்

இலங்கையில் பண்டைய காலத்தில் வாழ்ந்த இயக்கர் குலத்தை சேர்ந்த வேடுவ பெண்ணான குவேனி சிங்கள மக்களுக்கு இட்ட சாபத்தில் இருந்து மீள அவருக்கு ஆலயம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறிய கோத்தபாய
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் உதய கம்மன்பிலவின் நேற்றைய ஆரம்ப தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கோத்தபாய ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விசா நிராகரிப்பு - வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் யாழ். பெண்கள் அமைப்புடன் பேசிய கத்தரின் ருசெல்

அமெரிக்க அரசின் சிறப்புத் தூதுவரான கத்தரின் ருசெல் இலங்கை வருவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில் அவர் அதிரடியாக வீடியோ மூலம் யாழில் பெண்கள் அமைப்புடன் கலந்துரையாடியுள்ளார்.

ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியபடி, அவரது அமைச்சரவை இன்று இரவு கூடி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது

காதலர் தினம் : காதல் திருமணம் செய்த இளம்ஜோடி தற்கொலை
சிவகங்கையை சேர்ந்தவர் முத்துக்காளை. இவரது மகன் ராஜா (வயது 22). இவரது உறவினரான மதுரையைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் தீபா(வயது-18). இவர் ராஜாவுக்கு அத்தை மகள் உறவு முறை ஆகிறது.

மனைவிகளை விட்டுவிட்டு கள்ளக்காதலியுடன் போலிஸ் எட்டு விஷம் குடித்து தற்கொலை 
கோவையை அருகிலுள்ள தொண்டாமுத்தூர் பக்கமுள்ள நரசீபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கோவை பேரூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

உளுந்தூர்பேட்டை கோர்ட் அதிரடி : விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி
கடந்த பிப்ரவரி 2ம் தேதி, உளுந்தூர்பேட்டையில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தொடரப்பட்டது. 



ஈழத்தில் நடந்த கொடூரம்; ஒரே இரவில் 40 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்தனர்-
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கே.அ ங்கமுத்து 

மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையின் கீழ் பெரியார் பல்கலைக்கழகச் சமூகவியல் துறை சார்பில், தமிழ் இலக்கியங்களில் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த தேசிய அள விலான மூன்று நாள் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா பெரியார் பல்கலைக்கழக பதிவாளர்

14 பிப்., 2014


மட்டக்களப்பைப் சேர்ந்த டைரக்டர் பாலு மகேந்திரா உடல் தகனம் - பல்வேறு தரப்பினர் திரண்டு வந்து அஞ்சலி
திரைப்பட துறையை சேர்ந்த பாலசந்தர், பாரதிராஜா, இளையராஜா, மகேந்திரன், மணிரத்னம், வைரமுத்து, கமல்ஹாசன், சாருஹாசன், மோகன் சர்மா, விஜய், சூர்யா, சத்யராஜ், சிவகுமார், கே.வி.ஆனந்த், பி.வாசு, பார்த்திபன், நாசர்,

ஃபிபா கால்பந்து தரவரிசை: சுவிட்சர்லாந்தின் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் ஆறாம் இடத்தில். 154-வது இடத்தில் இந்தியா

சர்வதேச அளவில் கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகள் பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் பலமிக்க நாடுகளான பிரேசில் இங்கிலாந்து பிரான்ஸ் ஹொலந்து

தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பொன்னப்ப நாடாரின் மகன் பொன். விஜயராகவன் பாஜகவில் இணைந்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் பொன்னப்ப நாடார்.அவரது மகன் பொன். விஜயராகவன் தமிழக பா

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு 3ஆவது இடம்தான் கிடைக்கும் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவிமணியன் தெரிவித்தார்.
 திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கடந்த 45 ஆண்டுகளாக திமுக, அதிமுக என 2 கட்சிகளைச் சார்ந்த அணிகள் மட்டுமே தமிழக தேர்தல் களத்தில் இருந்துள்ளன. வரும் மக்களவைத்

பரபரப்பான தற்போதைய செய்தி 

முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா

தில்லி சட்டமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் அனுபவமில்லாத  நாங்களும் சில நேரங்களில்  ஏதாவது தவறு செய்ய வாய்ப்பிருப்பதாகவும்  யாருடைய மனதையாவது எனது கருத்து புன்படுத்தியிருந்தால் மன்னிக்கும்மாறு கேட்டுக்கொண்டார். பின்னர் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சட்டசபை நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்த அவர், சட்டத்தை மீறி எம்எல்ஏக்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும் அம்பானிக்கு ஆதரவாக என்னை விரட்ட முயற்சிக்கிறார்கள் என்று கோபமாக பேசினார்.
ஆரம்ப நிலையிலேயே ஜன்லோக்பால் மசோதா சட்டமன்றத்தில் தோல்வி அடைந்ததையடுத்து அவரது கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினர். இதனைதொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரவு 9 மணிக்கு ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் முதல் அமைச்சரானால் என பிரதமர் சொல்லும்போது சந்தோஷமாக இருந்தது: டெல்லியில் விஜயகாந்த் பேட்டி
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் வெள்ளிக்கிழமை காலை சந்தித்தார். பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

ஈழத் தமிழர் இனக்கொலையின் புதிய ஆதாரம்! ராஜபக்சேவின் வஞ்சக முயற்சி! வைகோ அறிக்கை!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இரண்டாம் உலக யுத்தத்தின் போது இலட்சக் கணக்கான யூதர்களை படுகொலை செய்த ஜெர்மனியின் அடலாஃப் ஹிட்லரின் நாஜி படைகள் நடத்திய கொடூரங்களின் சாட்சியத்தை டாச்சோ, ஆÞவிÞ சித்ரவதை முகாம்கள் இருந்த இடங்களில் இன்றும் காணலாம். வாஷிங்டனில் உள்ள பேரழிவு

ad

ad