புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு 3ஆவது இடம்தான் கிடைக்கும் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவிமணியன் தெரிவித்தார்.
 திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கடந்த 45 ஆண்டுகளாக திமுக, அதிமுக என 2 கட்சிகளைச் சார்ந்த அணிகள் மட்டுமே தமிழக தேர்தல் களத்தில் இருந்துள்ளன. வரும் மக்களவைத்
தேர்தலில், அதில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக தலைமையில் வலிமையான மாற்று அணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பா.ம.க. மற்றும் தேமுதிக இடம் பெற்றால் கூடுதல் பலம் சேர்க்க முடியும்.
 தற்போதைய நிலையில் பாஜக, மதிமுக கூட்டணி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தேமுதிக மற்றும் பாமகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஊழல் ஒழிப்பு கோஷத்தோடு உளுந்தூர்பேட்டையில் மாநாடு நடத்தும் விஜயகாந்த், கண்டிப்பாக திமுக மற்றும் காங்கிரசுடன் அணி சேர மாட்டார். அதேபோல் திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்பதற்காக போராடி வரும் பாமகவும், பாஜக தலைமையிலான அணியில் இடம் பெற வேண்டும்.
 தற்போதைய நிலையில் பாஜக அணிக்கும், அதிமுகவுக்கு இடையில் மட்டுமே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் திமுகவுக்கு 3 ஆவது இடம்தான் கிடைக்கும்.  திமுகவோடு கூட்டணி அமைத்தால், தேமுதிகவின் கடைசி அத்தியாயம் எழுதப்படும். இதனை நட்புரீதியாக விஜயகாந்திற்கு சொல்லிக் கொள்கிறேன். பாமக தனித்து நின்றால், வன்னியர் வாக்குகளை மட்டுமே பெற்று ஜாதியக் கட்சியாக மாறிவிடும். ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது.
 தமிழகத்தில் மோடிக்கு 17 சதவீத வாக்குகள் உள்ளன. பிப். 8ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில், இதுவரை காணாத அளவுக்கு மக்கள் கூட்டம் திரளும். மோடிக்கு கிடைக்கும் இந்த ஆதரவை, விஜயகாந்த் மற்றும் ராமதாஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 இந்த தேர்தலில், அரசியல் அதிசயம் நடைபெறும். மோடி மீதான எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது, அதிமுகவுக்கும், திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 45 ஆண்டுகளாக ஆண்டு வரும் திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை மீட்டு, தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ad

ad