புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


மட்டக்களப்பைப் சேர்ந்த டைரக்டர் பாலு மகேந்திரா உடல் தகனம் - பல்வேறு தரப்பினர் திரண்டு வந்து அஞ்சலி
திரைப்பட துறையை சேர்ந்த பாலசந்தர், பாரதிராஜா, இளையராஜா, மகேந்திரன், மணிரத்னம், வைரமுத்து, கமல்ஹாசன், சாருஹாசன், மோகன் சர்மா, விஜய், சூர்யா, சத்யராஜ், சிவகுமார், கே.வி.ஆனந்த், பி.வாசு, பார்த்திபன், நாசர், ஒய்.ஜி.மஹேந்திரா, அர்ச்சனா, ரேகா, குஷ்பூ ஆகியோரும்;
மறைந்த ஒளி ஓவியரான பாலுமகேந்திரா அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மற்ற துறைகளை சேர்ந்த காவல்துறை அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதி ஐ.பி.எஸ், வசந்த குமார்(காங்), ஜி.ராமகிருஷ்ணன்(மா.கம்யூ), ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். தமிழக ஆளுநர் ரோசய்யா, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பாலு மகேந்திரா உடல் தகனம்
மரணம் அடைந்த சினிமா டைரக்டர் பாலு மகேந்திரா உடல் சாலி கிராமம் தசராபுரத்தில் உள்ள வீட்டில பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
நடிகர்–நடிகைகள், டைரக்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் பகல் 1 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மட்டக்களப்பைப் சேர்ந்த இயக்குநர் பாலுமகேந்திரா மரணம்: திரையுலகினர் இறுதி அஞ்சலி
இலங்கையைச் சேர்ந்த தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா ( வயது 74) உடல்நலக் குறைவு காரணமாக  சென்னை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
1977-ல் கோகிலா என்ற கன்னடப் படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது. தமிழகத்தில் அத்தனை பெரிய வெற்றி பெற்ற கன்னடப் படம் இதுவாகத்தான் இருக்கும்.
தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது.
ஆர்ப்பாட்டமில்லாத, அழகிய வெற்றிகள் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார். அண்மைக்காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருந்தும், அதை வென்று, தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்தார்.

ad

ad