புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


நீங்கள் முதல் அமைச்சரானால் என பிரதமர் சொல்லும்போது சந்தோஷமாக இருந்தது: டெல்லியில் விஜயகாந்த் பேட்டி
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் வெள்ளிக்கிழமை காலை சந்தித்தார். பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 


இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்,
பிரதமரை பார்த்தேன். தமிழ்நாட்டு பிரச்சனைகள் பற்றிதான் அதிகம் பேசினேன். தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி பேசினேன். அதற்கு, தமிழ்நாட்டு மீனவர்களும் தமிழர்கள். இலங்கை மீனவர்களும் தமிழர்கள். ஆகையால் இந்த பிரச்சனையை நாங்கள் கவனத்துடன் பார்ப்பதாக கூறினார். தமிழக மீனவர்களும் எல்லை தாண்டக் கூடாது. மீனவர்களை கைது செய்தால் உடனே விடுவிக்க வேண்டும். படகுகளை சேதப்படுத்தக் கூடாது. வலைகளை அறுக்கக் கூடாது என்று இலங்கையிடம் கண்டித்திருக்கிறோம் என்றார். 
தண்ணீர் பிரச்சனை பற்றி பேசினோம். அதற்கு, கர்நாடகா மாநிலத்தவர்கள் தங்களுக்கு தண்ணீர் இல்லை என்று சொல்கிறார்கள். கேரளாவும் அதேபோல் சொல்கிறது. ஆகையால் அனைத்தையும் அனுசரித்து பேசி வருவதாக கூறினார்.மின்வெட்டு தற்போது 7 மணி நேரம், 8 மணி நேரம் தமிழகத்தில் ஏற்படுகிறது. வெயில் காலம் வந்தால் மேலும் அதிகரித்தால் என்ன செய்வது. ஆனால் தமிழக அரசு அதைக் கண்டுகொள்வதில்லை என்று கூறினோம். அனைத்து பிரச்ச னைகளையும் பார்த்துகொண்டுஇருப்பதாக கூறினார். தமிழக முதல் அமைச்சர் கடிதம் எழுதுகிறார். உங்களைப் போல் ஏன் நேரில் வரவில்லை. ஒருவேளை நீங்கள் முதல் அமைச்சரானால் இந்த பிரச்சனைகள் எல்லாம் தீருமோ... அப்படி சொல்லும்போது சந்தோஷமாக இருந்தது.
நான் சட்டசபைக்கு போகவில்லை. எனது கட்சி எம்எல்ஏக்கள் செல்கிறார்கள். ஆகவே அவர்கள் பிரதமரை சந்திக்க வேண்டும் என்பதற்காக அவர்களுடன் நான் வந்தேன். நான் ஏன் சட்டசபைக்கு செல்லவில்லை என்றால், என்னை யார் தாக்கி பேசுறாங்களோ, கிண்டலடிக்கிறாங்களோ, ஜெயலலிதாவை உசத்தி பேசுகிறார்களே அவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கிறார்கள். ஆகவே பதவி கொடுக்கிறதுதான் அவர்களுடைய வேலை. 
சட்டசபைக்கு வந்து நான் என்ன பண்ண. ரோடு சரியில்லை. மின்வெட்டு ஏற்படுகிறது. தண்ணீர் வரலை என்று மக்கள் பிரச்சனைகளை சொல்லி, அதை செய்துகொடுப்பதாக சொன்னால் நான் வருகிறேன். அசிகத்தை நான் எதையுமே நான் பார்க்கவில்லை. விஜயகாந்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நான் ஏன் மற்றவர்களை தொந்தரவு செய்ய வேண்டும். மற்றவர்கள் அவர்களது கோரிக்கைகளை பேசட்டும். 
என்னுடைய தொகுதிக்கு என்னால் முடிந்தவரை செய்கிறேன். இன்று எனது கட்சி எம்எல்ஏக்களுடன் நான் டெல்லி வந்து பிரதமரை பார்க்கிறேன். அவர்கள் (ஜெயலலிதா) வந்து பிரதமரை பார்த்தால் என்ன குறைந்தால் போகும். ஒரு கட்சியை அழிக்க நினைக்கிறார்களே தவிர, தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பிரதமரை பார்க்கலாம்.குடியரசுத் தலைவரை பார்க்க டெல்லி வரலாமே.
தொட்டத்துக்கு எல்லாம் தனி விமானம் மூலம் செல்கிறார்கள். கோர்ட்டுக்கு செல்கிறார்கள். அதற்கு டெல்லி வரலாமே. தமிழக பட்ஜெட் மக்கள் போற்றுகிற பட்ஜெட்டாக இருக்க வேண்டும். தூற்றுகிற பட்ஜெட்டாக இருக்கக் கூடாது. இந்த பட்ஜெட் தூற்றுகிற பட்ஜெட். துறையைச் சேர்ந்த மந்திரிகள் சட்டசபையில் பதில் சொல்ல மாட்டார்கள். அந்த அம்மாதான் படிக்கிறாங்க. 110 மேனியா அந்த அம்மாவுக்கு என்று நான் சொல்லுவேன். ஓ.பன்னீர்செல்வம் அம்மா... அம்மா.... என்று சொல்கிறார். இவர்தானே நிதி அமைச்சர் இவர்தானே சொல்லவேண்டும். கண்மூடித்தனமாக இருக்கக் கூடாது. எல்லாவற்றையும் சித்தரிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு புரியும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி: தமிழக பிரச்சனைகள் குறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமரையோ, குடியரசுத் தலைவரையோ சந்திக்கவில்லை என்று சொல்கிறீர்கள். மீனவர் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணாமல் இருப்பதற்கு காரணம் முதல் அமைச்சர் ஜெயலலிதா தான் என்று சொல்கிறீர்களா?
பதில்: உறுதியாக சொல்ல முடியும். அவர்கள் தானே தமிழக முதல் அமைச்சர். போன ஆட்சியும் அதைத்தான் செய்தது. தமிழகத்தை இரண்டு கட்சிகள் வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. வஞ்சிக்கக் கூடாது என்பது எனது ஆசை. 
கேள்வி: தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை, ஈழத்தமிழர்கள் பிரச்சனைக்கு தேமுதிக தீர்வு காணும் என்றீர்கள். தற்போது எதிர்க்கட்சியாக தேமுதிக உள்ளது. 33 மாதங்கள் கழித்து, காலதாமதமாக உங்கள் கட்சி எம்எல்ஏக்களுடன், பிரதமர் பதவிக் காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிய உள்ள நேரத்தில் இந்த சந்திப்புநடந்துள்ளேதே. தேர்தலுக்கான சந்திப்பு என கருதலாமா?
பதில்: நான் ஏற்கனவே இங்கு உண்ணாவிரதம் இருந்தேன். அப்போதிலிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறேன். எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சிதான். 
கேள்வி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்கள்?
பதில்: இதைக் கேட்கவா வந்திருக்கிறோம். பிரதமரை சந்திக்கத்தான் வந்திருக்கிறோம். யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன. என் கட்சி ஜெயிக்கணும். தமிழக மக்கள் நல்லா இருக்க வேண்டும். அது நடக்கும்.
கேள்வி: தைரியம் இருந்தால் எங்களை கட்சியில் இருந்து நீக்கிப் பாருங்கள் என்று தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் சொல்கிறார்களே?
பதில்: வேற கேள்வி
கேள்வி: கூட்டணி பற்றி சொல்லுங்கள்

பதில்:
 அதைப் பற்றி பேச வரவில்லை. இவ்வாறு பதில் அளித்தார்.

ad

ad