புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2012





பாலின சர்ச்சையில் சிக்கியதடகளத்தில் பல்வேறு முத்திரை பதித்த பிங்கி ஆண் என்பது உறுதியானது!


மேற்கு வங்கத்தை சேர்ந்த பிங்கி பிராம்னிக். 2006-ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் தங்கம் வென்றார். 

தடகளத்தில் பல்வேறு முத்திரை பதித்த பிங்கி மீது 2012-ம் ஆண்டு பாலியல் புகார் கூறப்பட்டது. பிங்கி பெண் அல்ல ஆண் என்றும் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி கற்பழித்ததாவும், பணத்தை மோசடி செய்ததாகவும் அவருடன் இருந்த பெண் ஒருவர் புகார் கூறினார்.   

அதன் அடிப்படையில் பிங்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 26 நாட்களுக்கு பிறகு ஜெயிலில் இருந்து விடுதலையானார். 

மேலும் பிங்கி ஆணா? பெண்ணா? என்பதை அறிய மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவருக்கு பாலின சோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளன. 

அதில், பிங்கி ஆண் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பிங்கி மீது கற்பழிப்பு மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிங்கி ஆண் என்று நிரூபிக்கப்பட்டதால், அவர் பெற்ற பதக்கங்கள் பறிக்கப்படும் எனத் தெரிகிறது.

ad

ad