புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2012


இலங்கை குறித்த தமது நடவடிக்கைகள் பெருமிதமாக உள்ளது!- அமெரிக்கா
சர்வதேச ரீதியில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது எனவும் அவ் வகையில் இலங்கை குறித்த  தமது நடவடிக்கைகள் பெருமிதமாக உள்ளளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்  இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை விவகாரம் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு சரியானதே என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் போன்ற விவகாரங்கள் தொடர்பில் இலங்கை இன்னமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனையே அமெரிக்கா வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டது முதல் மனித உரிமைப் பேரவையின் மேம்பாட்டிற்காக அமெரிக்கா உழைத்து வருவதாகவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ad

ad