புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2012


5வது ஒருநாள் இலங்கை 123/8 மழையால் ஆட்டம் பாதிப்பு

நியூசிலாந்து அணியுடனான 5வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 28.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்த நிலையில், ஆட்டம் கனமழையால் பாதிக்கப்பட்டது. ஹம்பன்டோடா, மகிந்தா ரஜபக்சே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசியது. தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்ததால், இலங்கை அணி 44 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. சண்டிமால் 0, திரிமன்னே 17, மேத்யூஸ் 0, சங்கக்கரா 5 ரன்னில் வெளியேறினர்.


தரங்கா , மகிளா ஜெயவர்தனே ஜோடி 5வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்தது. ஜெயவர்தனே 24, மெண்டிஸ் 0, பெரேரா 11 ரன்னில் ஆட்டமிழந்தனர். கடுமையாகப் போராடிய தரங்கா 60 ரன் (94 பந்து, 8 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினார். இலங்கை அணி 28.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்த நிலையில், மழையால் ஆட்டம் தடைபட்டது. நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ 3, எல்லிஸ் 2, போல்ட், மில்னி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரை, இலங்கை அணி 3,0 என ஏற்கனவே கைப்பற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ர் தொடரில் மோதுகின்றன.

ColomboNew Zealand 5th ODI team in

ad

ad