புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2012


கலைஞர் வரவேற்பு : அழகிரி புறக்கணிப்பு

"டெசோ' மாநாட்டு தீர்மான நகலை, ஐ.நா., சபையில் அளித்து விட்டு சென்னை திரும்பிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை, கலைஞர் தலைமையில், தொண்டர்கள், விமான நிலையத்தில் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியை, மத்திய அமைச்சர் அழகிரி புறக்கணித்தார்."டெசோ' மாநாட்டு, தீர்மான நகலை ஐ.நா., சபையில் வழங்க, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கடந்த மாதம், 31ம் தேதி நியூயார்க் புறப்பட்டுச் சென்றார். அதன் பின், லண்டனில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் 

பங்கேற்று விட்டு, நேற்று காலை, 8:20 மணிக்கு, ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் விமானம் மூலம் சென்னை திரும்பினர்.சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலினை, தி.மு.க., தலைவர் கலைஞர் வரவேற்றார். தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., ஆகியோரும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் அழகிரி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

ஸ்டாலினை வரவேற்க, 300க்கும் மேற்பட்ட கார்கள் விமான நிலையத்திற்குள் வந்ததால், வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பி வழிந்தன. கட்சி கொடி கட்டிய வாகனங்கள், சுங்கவரி செலுத்தவில்லை. சில இடங்களில் போலீசாருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதிக கூட்டம் இருந்ததால், விமான பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஸ்டாலினை வரவேற்க வந்த முன்னாள் அமைச்சர்கள் பலர், விமான நிலையத்தின் வருகை முனையத்தில், காத்திருந்த நிலையில், சில தி.மு.க., நிர்வாகிகள் மட்டும், விமான நிலையத்திற்குள் சென்றனர்.தங்களுக்கு தெரிந்த விமான நிலைய ஊழியர்கள், சுங்கத்துறையினர் மூலமாக, இவர்கள் விமான நிலையத்திற்குள்ளே சென்று, ஸ்டாலினுடன் வெளியே வந்தனர். இதனால், விமான நிலைய உள்வளாகத்திலும், கட்சி கரை வேட்டி அதிகமாக காணப்பட்டது.

ad

ad