புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2012

நோர்வே சிறுவர் காப்பகத்தினால் ஏமாற்றப்பட்ட மற்றுமோர் யாழ்ப்பாணத்து குடும்பம்
நோர்வே சிறுவர் காப்பகத்தினால் மற்றுமோர் யாழ்ப்பாணத்து குடும்பம் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது. அத்துடன் மேற்படி குடும்பத்துக்கு சாதகமான நீதிமன்றத்தின் தீர்ப்பும் நோர்வே சிறுவர் காப்பகத்தினால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து
கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
 

நோர்வேயின் ஒஸ்லோவில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வசந்தகுமாரன் மற்றும் ஷியாமலா வசந்தகுமாரன் தம்பதிகளின் ஷியாந்தன் (வயது 11) மற்றும் ஷண்ட்ஷியா (வயது 08) ஆகிய இரு பிள்ளைகள் நோர்வே சிறுவர் காப்பகத்தினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேற்படி இரு பிள்ளைகளின் மீதான வழக்கு விசாரணைகள் 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை ஒஸ்லோவிலுள்ள நீதிமன்றமொன்றில் இடம்பெற்றன.
இந்த வழக்கு விசாரணைகளின் முடிவில் மேற்படி இரு பிள்ளைகளையும் 48 மணித்தியாலயங்களில் காப்பகம் உரிய பெற்றோரிடத்தில் ஒப்படைக்க வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது. இதன்படி மறுநாள் பிற்பகல் 2 மணியளவில் பிள்ளைகள் பெற்றோரிடத்தில் ஒப்படைக்கப்படுவர் என்று வசந்தகுமாரன் ஷியாமலா தம்பதியருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தமது பிள்ளைகள் தம்மிடத்தில் வந்து சேரப் போகும் ஆனந்தத்தில் இருந்த பெற்றோருக்கு அதிர்ச்சி மட்டுமே வந்து சேர்ந்தது.

மறுநாளான 2011 செப்டெம்பர் 27 ஆம் திகதி வந்த தொலைபேசி அழைப்பொன்றில் தொடர்பு கொண்ட நோர்வே சிறுவர் காப்பக அதிகாரியொருவர் உங்களது பிள்ளைகளை தற்போது உங்களிடத்தில் தர முடியாதென்றும் மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப் போவதாகவும் கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.

இந்தச் செயற்பாட்டின் மூலம் நோர்வே சிறுவர் காப்பகம் நோர்வே நீதிமன்றத்தின் தீர்ப்பையே உதாசீனம் செய்திருக்கின்றமை அப்பட்டமாக தெளிவுபட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பெற்றோர் இதுவரையில் தமது பிள்ளைகளை இழந்த நிலையில் இருக்கின்றனர்.

இதேவேளை, சிறுவர் காப்பகத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எரிக் ஜோசப்பின் மனைவியான டிலாந்தினி ஜோசப்பின் தந்தை டோப்பையா பங்கிரேஸர்ஸ் என்பவர் தனது பேரப் பிள்ளைகள் நோர்வே சிறுவர் காப்பகத்தில் சிக்குண்டுள்ளமை மற்றும் அவர்களுக்கு விடிவு கிடைக்காமை ஆகியவற்றில் பாதிப்படைந்து ஏக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் மரணம் ஆகியுள்ளார்.

இவர் தனது பேரப் பிள்ளைகளின் விடுதலை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad