புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2012

ஜெனீவா சொக்லேட் தயாரிப்பாளர்கள் கின்னஸ் சாதனை
ஜெனீவாவில் உள்ள சொக்லேட் தயாரிப்பாளர்கள் 250 பேர் ஆறு மாத காலம் உழைத்து 1.2 கி.மீ நீளமான சொக்லேட்டை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
இதனை தங்கள் கடையின் 25வது ஆண்டு நிறைவடைந்ததன் நினைவாக தயாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
1.2 கிலோ மீற்றர் நீளமான 4.2 தொன் எடையுள்ள சொக்லேட்டை நூறு பேர் சேர்ந்து கொண்டுவந்து பார்வைக்கு வைத்தனர்.
கின்னஸ் நீதிபதி அன்னா ஆக்ஸ்ஃபோர்டு இப்புதிய சாதனையை அங்கீகரித்தார்.
உடனே கூடியிருந்த இரண்டாயிரம் பேரம் மகிழ்ச்சி ஆரவாரமிட்டனர். இந்நிகழ்ச்சி ஜெனீவாவில் பேலக்ஸ்ப்போ மையத்தில் நடைபெற்றது.
இனி இந்த சொக்லேட்டை முப்பதாயிரம் துண்டுகளாக்கி விற்பர். இந்த விற்பனையில் கிடைக்கும் பணத்தை (100,000 சுவிஸ் பிராங்க்) மார்புப் புற்றுநோய் மருத்துவ அமைப்புக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த 1.2 கி.மீற்றர் நீளமான சொக்லேட்டை தயாரிக்க 864 கிலோ மாவு, 432 கிலோ வெண்ணெய் மற்றும் 360 கிலோ சொக்லேட் பவுடர் தேவைப்பட்டதாக அறிகிறோம்.

ad

ad