புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2012

தமிழகத்தில் உண்மையான கேபிள் "டிவி' இணைப்புகளின் எண்ணிக்கையை கண்டறிய, ரேஷன் கடை ஊழியர்களை கொண்டு கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக, தனியார் வசமிருந்த கேபிள், "டிவி' இணைப்பு, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2011 செப்டம்பர், 11ம் தேதி முதல், தமிழக அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்தது.


இதன் மூலமாக, தமிழகத்தில், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டன. தவிர, "டி.டி.எச்.,' எனப்படும் நேரடி ஒளிபரப்பு சேவையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.அரசு கேபிள் இணைப்புக்கு மாத கட்டணமாக, 70 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 20 ரூபாய் எம்.எஸ்.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்டது. அரசு கேபிள், "டிவி' ஒளிபரப்பை கண்காணிக்க, மாவட்டந்தோறும் தனி தாசில்தார் நியமித்து, திறம்பட அரசு கேபிள் "டிவி' ஒளிபரப்பு பணியை செய்து வருகின்றனர்.மாநிலம் முழுவதும், 1.85 கோடி ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், 65 லட்சத்துக்கும் குறைவான கேபிள் இணைப்புக்கள் உள்ளதாக கணக்கு காட்டப்படுவதில், மிகப்பெரிய தவறு உள்ளதாக அரசு எண்ணுகிறது.இதனால், மாநில அளவில், அரசு கேபிள் இணைப்பு பெற்றவர் எண்ணிக்கையின், உண்மை நிலையை அறிய, ரேஷன் ஊழியர்கள் மூலமாக, கணக்கெடுப்பு பணி செய்ய அரசு உத்தரவிட்டது.தமிழ்நாடு அரசு கேபிள், "டிவி' நிறுவனம் சார்பில், கணக்கெடுப்புக்கு தனியாக விண்ணப்பங்கள் அச்சடித்து, மாவட்டம்தோறும் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாலுகா வட்டவழங்கல் அலுவலர் ஒருவர் கூறியதாவது:அரசு கேபிள், "டிவி' இணைப்புகளின் எண்ணிக்கையை கண்டறியவும், போலியாக கணக்கில் வராத இணைப்புகளை வெளிக்கொணரவும், ரேஷன் ஊழியர் மூலம் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்கிறோம். மாவட்டம், வட்டங்களில், கேபிள் இணைப்பு பெற்றுள்ளவரின் பெயர், முகவரி, கேபிள் ஆபரேட்டரின் பெயர் மற்றும் முகவரி, இணைப்புக்காக வசூலிக்கப்படும் மாதாந்திர கட்டணம், ஒளிபரப்பப்படும் சேனல்களின் எண்ணிக்கை, அதில் தெளிவான மற்றும் தெளிவற்ற சேனல்களின் எண்ணிக்கை, டி.டி.எச்., இணைப்பு வைத்துள்ளவரா? என்பதை, கார்டுதாரர்களிடம் கேட்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்வர்.இறுதியாக ரேஷன் ஊழியர் கையெழுத்திட்டு, வட்ட வழங்கல் அலுவலரிடம் வழங்குவர். தாலுகாவில் பெறப்படும் ஒட்டுமொத்த விண்ணப்பமும், மாவட்டந்தோறும் உள்ள, அரசு கேபிள் "டிவி' ஒளிபரப்பு பணிக்கான அலுவலரிடம் சேர்க்கப்படும். நவம்பர், 30ம் தேதி, கடைசி நாள். இவ்வாறு அவர் கூறினார்.ரேஷன் கடை பணியாளர் மூலம் கேபிள் கணக்கெடுப்பு நடப்பதை அறிந்த, கேபிள் ஆபரேட்டர்கள் கலக்கத்தில் உள்ளனர். தங்களின் தில்லுமுல்லு வேளை அம்பலமாகி, அதன் மூலம் கேபிள் தொழில் நடத்துவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

ad

ad