புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2012


2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் : 5 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்பு

2ஜி ஊழல் புகார்களையடுத்து 122 நிறுவனங்களின் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அவற்றுக்கான மறுஏலம் இன்று காலை 9 மணிக்கு துவங்கியது. தொலைபேசித் துறை செயலஆர். சந்திரசேகர் இந்த ஏலத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். 22 தொலைத் தொடர்பு மண்டலத்திற்கான 1800 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கு ஏலம் நடந்தது. இதில் பார்தி ஏர்டெல், வோடவோன், ஐடியா, டெலிநார் மற்றும் வீடியோகான் ஆகிய 5 நிறுனங்கள் மட்டுமே இன்றைய ஏலத்தில் பங்கேற்றன. 

இருந்தாலும் அந்த நிறுவனங்கள் அதிக தொகைக்கு ஏலம் கேட்கவில்லை. அனுமதி ரத்தானதால் பாதிக்கப்பட்ட நிறுனங்கள் இன்று பங்கேற்கவில்லை 5 மெகா ஹெர்ட்ஸ் வரை அலைக்கற்றைக்கு ரூ.14 ஆயிரம் கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.5 மெகா ஹெர்சுக்கு அதிகமாக இருந்தால் கூடுதல் கட்டணத்தை கொடுக்க வேண்டும். 

இல்லாவிட்டால் கூடுதலாக எடுத்த அலைக்கற்றையை திருப்பி கொடுத்து விடலாம் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த ஏலத்தின் மூலம் ரூ.40 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய ஏலத்தில் விறுவிறுப்பு இல்லை. மேலும் சி.டி.எம்.ஏ. சேவைக்கான அலைக்கற்றையை எடுக்கவும் எந்த நிறுவனமும் முன்வரவில்லை. 

எனவே, எதிர்பார்த்த அளவு ஏலம் போகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இன்று இரவு 7.30 மணி வரை ஏலம் நடைபெறுகிறது. அதன்பிறகே ஏலம் எடுத்த நிறுவனங்கள் மற்றும் ஏலத்தொகை பற்றிய விவரங்கள் தெரியவரும்

ad

ad