வடமாகாண உதைபந்தாட்டம் யாழ்.மாவட்ட அணி சம்பியன்
இலங்கை விளையாட்டு அமைச்சின் ஆதரவுடன் வட மாகாண விளையாட்டுத்திணை களம் வட மாகாண மாவட்டங்களுக்கு ,இடையே நடத்திய தெரிவு செய்யப்பட்ட 21 வயதுப் பிரிவு ஆண்களுக்கான உதைபந்தாட்ட அணிகளுக்கு இடையே
ஞாயிற்றுககிழமை பிற்பகல் நடைபெற்ற போட்டியில் யாழ் .மாவட்ட அணி வட மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்ட போதிலும் யாழ் மாவட்ட அணியின் முன்னனி வீரர் தனக்கு கிடைத்த ஒரு பந்தை கோலாக்கி முன்னிலைக்கு கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து ,இரு அணிகளும் பெரும் போராட்டத்தை ஆரம்பித்து விளையாடினார்கள்.யாழ் மாவட்ட அணிக்க மீண்டும் கோல்கள் பெறும் சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதிலும் அதனை உரிய முறையில் பயன்படுத்ததவறிய நிலையில் முதல் பாதி ஆட்டம் நிறைவு பெற்றது.
இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பமாகிய நேரம் முதல் யாழ் ;மாவட்ட அணி மீண்டும் கோல்கள் பெறும் வாய்ப்புக்களை தவறிவிட்ட நிலையில் ரசிகர்களின் விமர்சனத்திற்க்கும் உள்ளாகியது.
இதே நிலமையை மன்னார் மாவட்ட அணியும் செய்யத்தவற வில்லை. ஆட்ட நிறைவில் யாழ் மாவட்ட அணி 01 க்கு 00 என்ற கோல்கணக்கில் மன்னார் மாவட்ட அணியை வெற்றி பெற்று வட மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தை வடமாகாண ஆளுனர் ஜP.எ.சந்திரஸ்ரீ வழங்கி கௌரவித்தார்.