புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

ஆசியக் கிண்ண ஹொக்கிப் போட்டி: தென்கொரிய அணி சம்பியன்

ஆசியக் கிண்ண ஹொக்கிப் போட்டியில் இறுதிப் போட்டியில் 4 - 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி நடப்புச் சம்பியனாக தென்கொரிய அணி வெற்றி பெற்றது.

மலேசியாவின் ஈபோ நகரில் இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் தென் கொரிய வீரர்கள் 2 - 0 என்ற முன்னிலையில் இருந்தனர்.
இடைவேளைக்குப்பின் வெகுண்டெழுந்த இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டத்துக்கு 6 நிமிடங்களுக்கு முன்வரை இரு அணிகளின் கோல்களும் 3 - 3 என்ற சமநிலையை அடைந்தது.
ஆனால் தென் கொரியாவின் காங் மூன் கியோன் 68 வது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலை பெற வைத்தார். இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இறுதியில் தென் கொரியா அணி 4 - 3 என்ற கணக்கில் ஆசிய கோப்பையைக் கைப்பற்றியது.
தென் கொரியாவின் இந்த வெற்றியின் மூலம் மலேசிய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை ஹொக்கி போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணத்துக்கு தகுதி: ஆசிய கிண்ண போட்டியின் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி தோற்றதால் இந்திய அணி நெதர்லாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஹொக்கி போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
ஆனால் ஆசிய கிண்ணத்தை வென்றிருந்தால் உலகக் கிண்ண ஹொக்கி போட்டிக்கு இந்தியா நேரடியாகக் தகுதி பெற்றிருக்கும்.
தற்போது 2ம் இடத்தை பிடித்ததால் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஓசினியா கோப்பை போட்டி முடியும் வரை இந்தியா காத்திருக்க வேண்டும். அப்போ துதான் உலகக் கிண்ண போட்டியில் இந்தியா பங்கேற்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
பாகிஸ்தான் 3ம் இடம்: 3ம் இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானும், மலேசியாவும் மோதின.
இதில் பாகிஸ்தான் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

ad

ad