புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013



நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவின் அணுகுமுறை! எதிர்பார்ப்பில் மறுமலர்ச்சியினர்!

விருதுநகரில் அண்ணா பிறந்த நாள் மாநாட்டை மறுமலர்ச்சி தி.மு.க. நடத்துகிறது. இதற்கான பந்தல் அமைக்கும் பணியினை நான்கு முறை பார்வையிட்டிருக்கிறார் வைகோ. 

இந்த மாநாடு குறித்து மதிமுக வட்டாரம் நம்பிக்கையோடு பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இதோ - 
நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி தி.மு.க.வின் அணுகுமுறை என்ன என்பது இந்த மாநாட்டில் தெரியும்.
இதுவரை நடைபெற்ற மாநாடுகளை விட மிகச் சிறப்பாக நடைபெறும். 
ரூபாய் மதிப்பும், மத்திய அரசின் மதிப்பும் வேகமாக சரிந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் முடங்கிக் கிடப்பதற்கு காங்கிரஸ் அரசே காரணம் ஆகும். இந்த நாட்டையே பன்னாட்டு கம்பெனிகளின் காலனி அரசாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மாற்றி வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது. அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் அடியோடு பாழாகிவிட்டது. தமிழகத்திலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும்.
மறுமலர்ச்சி தி.மு.க. நாட்டு மக்களுக்கு தொடர்ந்து பாடுபடும். நாங்கள் மிக வேகமாக மக்கள் மத்தியில் வளர்ந்து வந்துகொண்டிருக்கிறோம்.
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறக்கூடாது.  இதற்காக, மாணவர்கள் சைக்கிள் பயணம் செல்ல இருக்கிறார்கள்.

நவநீதிம் பிள்ளை இலங்கை சென்றபோது, இலங்கை அமைச்சர் எனக்கு திருமணம் ஆகிவிட்டது. நவநீதம்பிள்ளையை வேண்டுமானால், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயார் என்று அகம்பாவத்தோடு பேசுகிறார். அங்குள்ள தமிழர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்திருயிருக்கிறார்கள். அங்கு பன்னாட்டு விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு நவநீதம் பிள்ளை சென்றபோது இதே  கருத்துதான் வலியுறுத்தப்பட்டது.

ad

ad