புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

177 கி.மீ. புளோரிடா கடலை நீந்தி 64 வயதான அமெரிக்க வீராங்கனை சாதனை
177 கி.மீ. புளோரிடா கடலை நீந்தி 64 வயதான அமெரிக்க வீராங்கனை சாதனை


அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனை டயான நையத் (64). இவர் கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை 177 கி.மீ. தூரத்தை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியை சனிக்கிழமை காலை தொடங்கினார்.  

177 கிலோமீட்டர் நீளமுடைய இந்த
புளோரிடா நீரிணைப்பை முதலாவது நபராக நீந்திக்கடக்கும் முயற்சியை சுறாக்கவசம் இன்றி அவர் மேற்கொண்டார். சுமார் 53 மணி நேர தொடர் நீச்சலுக்கு பிறகு புளோரிடாவின் கீ வெஸ்ட் நகர கடற்கரையை நேற்று வெற்றிகரமாக சென்றடைந்தார்.

1978-ம் ஆண்டுமுதல் 4 முறை தோல்வியை தழுவிய 64 வயதான டயானா நையத் கடைசியாக 5-வது முறையாக கடந்து வெற்றிபெற்றுள்ளார். கரையேறிய இவரை நூற்றுக்கணக்கானோர் ஆராவாரத்துடன் வரவேற்றனர். 

அப்போது, ஒரு போதும் முயற்சியை கைவிடாதீர்கள், வயதை கருத்தில் கொள்ளாதீர்கள், விளையாட்டு சிந்தனையை இது வளர்க்கும் என்று சாதனையாளர் டயானா கூறினார். 

கடலில் நீத்துகிறபோது சுறா மற்றும் ஜெல்லி மீன்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகத்தில் சிலிகான் முகமூடியை அணிந்துகொண்டார். இந்த சாதனையை முடிக்க அவருடன் 35 உதவியாளர்களும் சென்றனர்.

ad

ad