புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

தமிழக மக்களுக்கு திமுக துரோகம் இழைத்து விட்டதா? :  கலைஞர்
உணவு பாதுகாப்பு சட்டத்தைத்  ஆதரித்தது குறித்து திமுக தலைவர் கலைஞர்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில்,  ’’உணவு மசோதாவை ஆதரித்தது, தமிழக மக்களுக்கு திமுக துரோகம் இழைத்து விட்டது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு இதுவரை மாதம் 1.70 லட்சம் டன் என்ற அளவில் இருந்த அரிசி, இனிமேல் மாதம் ஒன்றுக்கு 2.37 லட்சம் டன் என்று உயர்த்தப்பட்டுள்ளது. அரிசியின் விலை கிலோ ரூ.3 மட்டும். இதை வாங்குவதற்கு ஆகும் செலவு 856.44 கோடி மட்டும்.
இந்தப் பிரிவுகளின் கீழ் தமிழகம் இதுவரை பெற்றுவந்ததைவிட, கூடுதலாக 67 ஆயிரத்து 900 டன் அரிசி கூடுதலாகக் கிடைக்கும். அதைப்போல வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள மக்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு இனிமேல் 8.14 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு கூடுதலாக வழங்கும். இவை தமிழக அரசுக்கு லாபங்கள்.
வறுமைக் கோட்டுக்கு மேல மற்றும் கீழ் ஆகிய இரண்டு வித அரிசிக்காகவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுக்கும் நிதி ரூ.1,434 கோடியாகும்.ஆனால் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவதற்கு முன், ரூ.2,231 கோடி மத்திய அரசுக்குத் தமிழக அரசுக்குக் கொடுத்தது. இதன் மூலம் ரூ.797 கோடி தமிழக அரசுக்கு செலவு குறையும்.  இதனால்தான் உணவு பாதுகாப்பு மசோதாவை திமுக ஆதரித்தது.
இதையெல்லாம் மறைத்துவிட்டு,  உணவு பாதுகாப்புச் சட்டம் மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக ஆயிரம் கோடி செலவாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறுவது அப்பட்டமான பொய்.
உணவு மசோதாவை அதிமுக சார்பில் எதிர்ப்பதாகக் கூறவில்லை. திருத்தங்கள் மட்டுமே கோரியது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான பாஜகவே இந்தச் சட்டத்தை ஆதரித்தது.
இந்தச் சட்டத்தை அதிமுக ஆதரிக்கவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, சட்டத்தை ஏற்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

ad

ad