புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

நரேந்திர தபோல்கர் படுகொலைக்கு எதிரான கண்டன கூட்டம்
மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய பகுத்தறிவாளர் நரேந்திரா தபோல்கர் படுகொலையைக் கண்டித்தும், மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் தமிழகத்திலும், இந்தியா முழுமைக்கும் இயற்றக் கோரியும் தீர்மானம். 



இந்திய சமூகத்தை பீடித்துள்ள மூட நம்பிக்கைகளுக்கு எதிரானப் போரில் தன் உயிரையே விலையாக தந்துள்ளார் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த Dr. நரேந்திரா தபோல்கர்.  இப்படுகொலையை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடுமையாகக் கண்டிக்கிறது.


 தபோல்கர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர் மட்டுமல்ல; இயற்கையை நேசிப்பவர், சமூக ஏற்றத்தாழ் வுகளுக்கு எதிரானவர். வினாயகர் சதுர்த்தி விழாவின்போது “பிளாஸ்டர் ஆப் பாரீஸ்” என்னும் நச்சுப் பொருளை கொண்டு விநாயகர் சிலைகளை செய்து இயற்கையினை நாசப்படுத்துவதற்கு எதிராக போராடி யவர்.

தனது வாழ்வில் அறிவியல் பிரச்சாரத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் போராடினார். சமூக நீதி நிலைத்திட, சமத்துவம் காண சாதிமறுப்புத் திருமணங்களை முன்னின்று நடத்திய சமூக போராளியான தபோல்கரின் கொலை ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. இது சமூக முன்னேற்றத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் மிகப்பெரிய இழப்பு.


இந்திய அரசியல் சாசனம் பிரிவு 51A (h), ”ஒவ்வொரு இந்திய குடியும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அடிப்படை கடமை” என உணர்த்துகிறது. பில்லி சூனியம், மாந்திரிகம், ஜோதிடம், ஏவல், போலி சாமியார்கள் போன்ற பல மூடநம்பிக்கை இந்திய அரசியல் சாசனத்திற்கு முரனாக உள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் இந்தியா முழுமைக்கும் மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் இயற்றக் கோருகிறோம்.


இந்தத் தீர்மானம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மக்கள் நல்வாழ்வு இயக்கம், சரிநிகர் முற்போக்குத் திருமண இயக்கம் மற்றும் தகவல் மையம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்,  பொதுப் பள்ளிக்கான மாநில மேடை போன்ற அமைப்புகளின் நிர்வாகிகள், விஞ்ஞானி கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் பங்குபெற்ற கண்டனக் கூட்டதில் நிறைவேற்றப்பட்டது.  

ad

ad