புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2013

ஆலய இடிப்பு தொடர்பாக இதொகா ஆளுந்தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - மனோ

தம்புள்ளை என்பது மாத்தளை மாவட்டத்தின் ஒரு பகுதி. மாத்தளை மாவட்ட தமிழ் இந்து மக்கள் நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில், இதொகா உறுப்பினர் ஒருவரை வாக்களித்து தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே இது காரணமாகவும், ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி என்ற அடிப்படையிலும், இதொகா இந்த மதவாத அநீதி தொடர்பாக ஆளுந்தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது கட்சி எதிர்தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை அம்மன் ஆலய உடைப்பு தொடர்பாக கருத்து கூறிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
 
ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு எதிர்க்கட்சி.  நாம் எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் இந்த மதவாத அநீதி தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து விட்டோம். நமது கடமையை நாம் செவ்வனே நிறைவேற்றி வருகிறோம்.
 
ஆளும் அரசின் பங்காளி கட்சி என்ற அடிப்படையிலும், மாத்தளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்ற கட்சி என்ற அடைப்படையிலும் இதொகாவும் இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் தமிழ் இந்து மக்கள் ஒரு சமஅந்தஸ்துள்ள மக்கள் பிரிவினர் என்ற அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு நியாயமான நிரந்தர தீர்வு அவசியம் என்பது பற்றி தமது ஆட்சி தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இதொகா தெளிவு படுத்த வேண்டும். இந்த மக்கள் தம்புளை பெளத்த புனித நகர் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதையும், பாதுகாப்பு செயலாளரின் கீழ் செயல்படும் நகர அபிவிருத்தி சபை, தனது 24/09/21012 திகதியிட்ட17/DM/924 இலக்க கடிதத்தில் பொல்வத்தை என்ற இடத்தில் மாற்றுகாணி வழங்க உடன்பட்டுள்ளதையும், இன்று அந்த காணியும் இந்த மக்களுக்கு மறுக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி  உறுதியளிக்கப்பட்டு அடையாளம் கண்டுள்ள இந்த பொல்வத்தை காணியை உடைக்கப்பட்ட ஆலயத்தை மீண்டும் கட்டுவதற்கும், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குடியிருப்புகள் கட்டுவதற்கும் வழங்க  நகரஅபிவிருத்தி சபையை இணங்க செய்யும்படியும் கேட்டு கொள்கின்றேன். இது தொடர்பாக, அவசியப்படும் அனைத்து ஒத்துழைப்புகளையும் தருவதற்கு நமது கட்சி  தயாராக உள்ளது என இந்நாட்டில் வாழும் தமிழ் இந்து மக்கள் சார்பாக தெரிவித்துகொள்கிறேன்.  

ad

ad