புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2013

விக்கினேஸ்வரனையும் சம்பந்தனையும் குறை கூறுவதற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு அருகதையில்லை -அரியநேத்திரன்

முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் சம்பந்தனையும் நாடகமாடுபவர்கள் என்று கூறுவதற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எவ்வித தகுதியும் கிடையாது. அவ்வமைப்பின் கூற்றுக் கண்டிக்கத்தக்க விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.
விக்னேஸ்வரனும் சம்பந்தனும் நாடகமாடாமல் முஸ்லிம் மக்களின் நிலங்களை ஒப்படைக்க வேண்டுமென முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
 
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
 
எங்கள் தலைவர்கள் உண்மையில் நாடகமாடவில்லை. முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து நாடகம் ஆடுவதனால் தான் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் இன்னும் குடியேற்றப்படாமல் உள்ளனர். முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கவலையைத் தெரிவித்துள்ளது. யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் முஸ்லிம் மக்களை குடியேற்றாமல் இருப்பது அரசாங்கத்தின் தவறேயன்றி கூட்டமைப்பின் தவறு அல்ல என்பதை அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண தேர்தலில் வெற்றிபெற்று இன்னும் இரண்டு மாதங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில் அதற்கு முன் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு இதைச் செய்ய வேண்டிய பாரிய கடப்பாடு இருந்தது. முஸ்லிம் மக்களிடம் அரசியல் இலாபம் தேடுவதற்காக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சாட்டாக வைத்து அரசியல் இலாபம் தேடிக் கொண்டிருப்பவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்பது தான் உண்மை. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் செயலாளராக இருக்கின்ற முகமட் முஸாமில் போன்றவர்கள் அலரி மாளிக்கைக்கு சென்று விட்டு வந்து இவ்வித இனவாதக் கருத்துக்களைக் கூறக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad