புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2013



முன் எச்சரிக்கை!

இது... பெண்களின் இதயத்துக்கு நெருக்கமான செய்தி என்றாலும் இதய பலகீனமுள்ள ஆண்கள் இதைப் படிக்க வேண்டாம்.

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் 

படாஅ முலைமேல் துகில். (7-1087)

என்கிறது திருக்குறள்.

இளம் பெண்ணின் மார்பின் மீது அணியப்பட்ட துணி, மதம் கொண்ட யானையின் முகத்தில் அணியப் பட்ட அலங்காரத் துணி போன்றது என்பது பொருள்.

இப்படி வள்ளுவரோ, வைரமுத்துவோ... மார்புக் கச்சை குறித்து பேசாத கவிஞருமில்லை. இலக்கியமும் இல்லை.

ஜாக்கெட்டுக்கு மேல் மார்புக் கச்சை அணிந்தவள் சூப்பர் வுமன். (அரசி) பேண்ட்டுக்கு மேல் ஜட்டி போடுபவன் சூப்பர்மேன். இப்படி அன்று முதல் இன்று வரை உள்ளாடை உலகம் பல விசித்திரங்கள் நிறைந்ததாக இருக்கிறது.



ம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக கிராமங்களில் "மல்லுத்துணி' எனப்படும் வெள்ளைத் துணியால் பனியன் போன்று தைக்கப்பட்ட உள்ளாடையைத்தான் பெண்கள் அணிவார்கள். "பிரேஸியர்' எனப்படும் கப் வைத்த நவீன பிராவை "பகட்டுப்பாடி' என்பார்கள். இதை அணிவது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால் இன்று... பெண்கள் உலகில் அழகுப் பொருட்களில் அத்தியாவசிய மான ஒன்றாக  கொண்டாடப்படுகிறது இந்த உள்ளாடை.



இப்படி பிராவை பெண்கள் விரும்பினாலும் கூட... அமெரிக்க இளம்பெண்கள் ஜூலை 9-ந்தேதியன்று மைதானங்களில் கூடி பிராக்களை மேலே தூக்கி வீசி "நோ பிராடே' கொண்டாடு கிறார்கள். வேறு சில நாடுகளில் அக்டோபர் 13-ல் "நோ பிராடே' கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் இந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து வரும் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே போன்ற சில நடிகைகள் அக்டோபர் 13-ல் "நோ பிராடே' கொண்டாடுகிறார்கள்.


சினிமாவில் வசன காட்சிகளில் நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா வருவதற்கும், பாடல் காட்சிகளில் அவர்கள் வருவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். பாடல் காட்சிகளின் போது நடிகைகளுக்கு கூடுதல் கவர்ச்சிக்காக ஸ்பெஷல் பிராவை பயன்படுத்துவார்கள். 

லேட்டஸ்ட்டாக பத்து மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒரு பிரா தயாரிக்கப்பட்டது. பத்து மில்லியன் என்றால் ஒரு கோடி டாலர். அதாவது இந்திய மதிப்பில் அந்த பிராவின் விலை... 61 கோடி ரூபாய்.

(யாருப்பா மயங்கி விழுந்தது? முன்னெச்சரிக்கையை படிக்கலையா?)

விக்டோரியே சீக்ரெட் எனும் அமெரிக்க நிறுவனம் இந்த 61 கோடி ரூபாய் பிராவை தயாரிச்சிருக்கு.

"அவிய்ங்களுக்கு வேற வேலை இல்லியா?'னு யாரும் டென்ஷனாக வேணாம். அவிய்ங்க வேலையே இது தான். 1977-லருந்து அவிய்ங்க வேலையே உள்ளாடை தயாரிப்பதுதான்.

இந்த நிறுவனத்திற்கு தூய பருத்தி சப்ளை செய் பவர்கள் பருத்தியைப் பிரிக்க குழந்தைத் தொழிலாளர் களைப் பயன்படுத்துவ தாக... இந்த கச்சை நிறுவனம் மீது சர்ச்சை இருந்தாலும் இவிய்ங்க தயாரிப்புக்கு மவுசுதான். 

61 கோடி ரூபாய் பிராவுல அப்படி என்ன தான் இருக்கு?

முத்து, வைரம்னு 4200 கற்கள், பாதி பேரிக்கா வடிவ சிவப்பாய் ஜொலிக்கும் மாணிக்கக் கல் டாலர், தங்கத்தால ஸ்ட்ராப்... இப்படி ஆபரணங்களால் செஞ்சிருக்காங்க.

எப்படிச் செஞ்சாங்க?

தென்னாப்பிரிக்க நாட்டு வெள்ளைக்கார மாடல் அழகி கேண்டிஸ் ஸ்வேனே போய்ல்-ஸை நிக்க வச்சு பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் மாதிரியான ஒரு களிமண்ணில் அச்சுப் பதிச்சு, அந்த அச்சுக்கேற்ப மோல்டிங் செஞ்சு... அதுக்குத் தகுந்த மாதிரி கை வேலைப்பாடுகளால், நுணுக்கமா பிராவை உருவாக்கியிருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு மௌவட் எனும் நகை வடிவமைப்புக் கம்பெனி.

""என் அளவுக்கு இந்த சூப்பர் பிரா தயாரிக்க மோல்ட் எடுத்தப்போ... எனக்கு ரொம்ப திகிலா இருந்துச்சு. இந்த பிரா எப்படி அமையும்னு பலவிதமா நான் கற்பனை பண்ணினேன். ஆனா என் கற்பனைக்கு எட்டாத அளவில், அழகில் இந்த பிரா தயாராகியிருக்குது. இதை அணிஞ்ச போது எனக்கு ரொம்ப நெர்வஸா இருந்துச்சு. இப்படி ஒரு அற்புதம் ஒருமுறைதான் நிகழும். அந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரி'' என ஓரம் துளிர்க்கும் கண்ணீரோடு பரவசமாக சொல்கிறார் கேண்டிஸ்.

பிரா நிறுவனத்தின் ஸ்பெஷல் கண்காணிப்பில் இருக்கிறார் கேண்டிஸ். இன்னும் பத்து நாட்களுக்குப் பிறகு நடைபெறப் போகும் முறையான விழாவில்தான் உலக ஃபேஷன் டிஸைனர்கள், மாடல் அழகிகள் முன்பு இந்த பிராவை அணிந்து அன்ன நடைபோடப் போகிறார் கேண்டிஸ்.

அதற்குள் டயட் மீறி சாப்பிட்டு சதை போட்டு... பிரா பொருந்தாமல்  போகக்கூடாது என்பதால் இந்த கண்காணிப்பு.

இரண்டு பாடிகார்ட்டுகள் இந்த பிராவை பெட்டகத்தில் வைத்து 24 மணி நேரமும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்காங்க.

இந்த பிராவை வாங்கினாலே பெரிய்ய "பிரா'ப்பர்ட்டிக்கு சொந்தக்காரர்தான்.

பின் எச்சரிக்கை!


"ஏங்க... இந்தத் தீபாவளிக்கு... புதுசா வந்திருக்க "அதை' வாங்கித் தாங்களேன்!'னு கேட்டு... எந்த அப்"பிரா'ணிகளாவது ஹார்ட் அட்டாக்குக்கு ஆளானால் கம்பெனி பொறுப்பில்லை.

-இரா.த.சக்திவேல்



 உஷ்!
மன்றம் கூடும் முன்பு, அமைச்சு உறுப்பினர்களைக் கூட்டினார், முதன்மை. சூழல் துறைக்காரரிடம், திட்ட அனுமதிக்காக நிலுவையில் உள்ள எல்லா மனுக்களையும், உடனே ’பார்த்தனுப்பும்படி கட்டளையிட்டிருக் கிறார். அதன் பிறகு அங்கு ஒரே அனல். "நாடாளும் தேர்தல் வருது. ஒவ்வொருத்தரும் பல கோஷ்டிகள வச்சிகிட்டு இருக்கீங்க. இதெல்லாம் எனக்குப் பிடிக்காதுனு தெரி யாதா? பி.ஏ.களைக்கூட உங்களால கட்டுப் படுத்த முடியல. பலருக்கு துறையில என்னென்ன திட்டம், மத்திய நிதி, மானியம் எவ்வளவுனு கூடத் தெரியலை...'’என வறுத்தெடுத்து இருக்கிறார். 

ad

ad