புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2013

கல்முனை மேயர் சிராஸ் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்! ஹக்கீம் அதிரடி நடவடிக்கை
சுழற்சி முறை இணக்கப்பாட்டையும் கட்சியின் தீர்மானத்தையும் மீறியுள்ள கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இன்று முதல் மேயராக செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார். 
சுழற்சிமுறை இணக்கப்பாட்டின் பிரகாரம் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தான் பணித்ததுடன் அதற்கு ஒக்டோபர் 31 வரை காலக்கெடு விதித்திருந்ததாகவும், தெரிவித்துள்ள ஹக்கீம்,  கட்சியின் கட்டுக்கோப்பை மீறி, தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சாய்ந்தமருதில் பிரதேசவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் சிராஸ் மீராசாஹிப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதன் மூலம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களுள் முரண்பாடுகளையும் தேவையற்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்த அவர் முனைந்துள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகையினால் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் தற்துணிவு அதிகாரத்தின் பேரில் கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் என்பவர் இன்று தொடக்கம் பதவி வகிக்க முடியாது என பிரகடனம் செய்கிறேன் என அவர் அறிவித்துள்ளார்.

ad

ad