தேவர் பிறந்தநாளில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கருக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. விஜயபாஸ் கரின் பூர்வீகம் புதுக்கோட்டை. அவரது அப்பா அன்றைய அ.தி.மு.கவில் ஆர்.எம்.வீ. கோஷ்டியில் இருந்து சேர்மன் ஆனவர். ஆர்.எம்.வீ. சிபாரிசில் 1996-ல் அண்ணாமலை பல்கலையில் மருத்துவப்படிப் பில் சேர்ந்தார் விஜயபாஸ்கர். ஜெ.வை யாரும் நெருங்கவே பயந்த அச்சமயத்தில் அவரை பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வந்தவர். உடனடியாக அவ ருக்கு கடலுர் மாவட்ட மாணவரணி செயலாளர் பதவியைக் கொடுத்தார் ஜெ.
அவரது தங்கையின் பெயர் ராசி. அதே பெயரில் புதுக் கோட்டை பகுதியில் கருங்கல்களை உடைத்து ஜல்லியாக்கும் ராட் சஸ க்ரஷர்களை நடத்தி வருகிறார். தி.மு.க ஆட்சியின் போதுகூட பக்கத்து மாவட்டத்து பணிகளுக்கு இவரது க்ரஷர்களிடமிருந்து தான் ஜல்லிகளை வாங்கவேண்டும் என்ற எழுதப்படாத உத்தரவு இருந்தது. இந்த நிலையில்தான் கடந்த செவ்வாயன்று சட்டமன் றத்தில் தி.மு.க தலைவர் கலைஞரின் உடல்நிலை குறித்தெல்லாம் கடுமையாக விமர்சித்துப் பேசினார் விஜயபாஸ்கர். மறுநாள் அவருக்கு மருத்துவத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட் டது. 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் 60 ஏக்கர் அளவிற்கு கட்டிடங்கள் கட்டி மதர் தெரஸா இன்ஜினியரிங் கல்லூரியை நடத்தி வருகிறார் விஜயபாஸ்கர். மருத்துவக் கல்லூரிக்கும் அவர் அனுமதி கேட்டுள்ள நிலையில், அவரே அத்துறையின் மந்திரியாகும் அதிர்ஷ்டத்தைப் பெற்றுள்ளார்.
மருத்துவத்துறை அமைச்சராக இதுவரை இருந்துவந்த வீரமணி எட்டாம் வகுப்பு வரையே படித்தவர். இப்போதுதான் அவர் துறையின் நுணுக்கங்களை அறிந்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அவரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக்கியதில் வீரமணி தரப்பு அதிர்ந்து போயிருக்கிறது. வைகைச்செல்வனை பள்ளிக்கல்வித்துறையிலிருந்து தூக்கியதும் அப்பொறுப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனிடம் கூடுதலாக வழங்கினார் ஜெ. சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ கேட்ட கேள்விகளுக்கு பழனியப்பன் திணற, இப்போது அவரிடம் கூடுதலாக இருந்த துறை, மருத்துவத்தைப் பறிகொடுத்த வீரமணிக்குக் கிடைத்திருக்கிறது.
சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததால் தீபாவளிக்காக புதன் இரவு அல்லது வியாழன் காலையில் சொந்த ஊருக்கு கிளம்பலாம் என்றிருந்த சக அமைச்சர்கள், வெள்ளியன்று பதவியேற்பு வைபவம் இருப்பதால் தலைநகரிலேயே தங்க வேண்டியதாயிற்று. ஆரம்பத்திலிருந்து அதிரடி அரசியல் செய்து வரும் விஜயபாஸ்கர், இனியாவது இந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் விதத்தில் அடக்கமாக செயல்படுவாரா என்ற கேள்வி அவரது வட்டத்திலேயே உள்ளது.