புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2013


மிஸ் ஆசிய பிசிபிக் அழகிப் போட்டியில் பட்டத்தை வென்ற இந்திய அழகி
 


2013-ம் ஆண்டுக்கான மிஸ் ஆசிய பிசிபிக் அழகிப் போட்டி கொரியாவில் நடந்தது. இதில் 21 வயதான இந்திய அழகி சிருஷ்டி ரானா கலந்து கொண்டு பட்டத்தை வென்றார்.

ராணா தனது நளினம், அழகு மற்றும் புத்தி கூர்மையால் நீதிபதிகளை தன பக்கம் ஈர்த்து ஏகோபித்த வெற்றியைப் பெற்றார்.

இந்தியாவின் தேசியப் பறவை மயில் போன்ற அவரது உடை அலங்காரம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. இதற்கான சிறந்த தேசிய ஆடை விருதையும் அவர் பெற்றார். கடந்த 2000-ம் ஆண்டில் தியா மிர்சா இந்தப் பட்டத்தை வென்றிருந்தார். என்னுடைய கனவு நனவாகியுள்ளது. இதுகுறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதற்காக கடவுளுக்கும், பெற்றோர்களுக்கும், நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன் என்றார்.

ஆசியா பசிபிக் அழகிபோட்டி பழைமையான சர்வதேச அலங்காரப் போட்டியாகக் கருதப்படுகின்றது. திறைமையான நீதிபதிகளால் கடுமையான விதிமுறைகளுடன் தேர்வுகள் நடத்தப்படுவதால் இதில் தேர்வு செய்யப்படுவது என்பது பெருமை மிகுந்த ஒரு விஷயமாகக் கருதப்படுகின்றது.

ad

ad