புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2013

சம்பந்தன் தொலைபேசியில் முறையீடு! வீடுகள் இடிப்பதை நிறுத்துமாறு ஜனாதிபதி படையினருக்கு உத்தரவு
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் படையினரால் பொதுமக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி யாழ்ப்பாண கட்டளை தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார்
இந்த தகவலை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனிடம் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.
நேற்று காலை சம்பந்தன் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டார்.
வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவது யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இதன்போது சம்பந்தன் குறிப்பிட்டார்.
இதனையடுத்தே ஜனாதிபதி யாழ்ப்பாண கட்டளை தளபதியுடனும், கொழும்பில் உள்ள இராணுவத் தளபதியுடனும் தொடர்பு கொண்டு இராணுவத்தின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார் என்று லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் விரைவில் இது விடயத்தில் தாம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad