புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2013

ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவிக்கு சார்பாக கனடா நீதிமன்றம் தீர்ப்பு! நாடு கடத்தப்படும அபாயம் நீங்கியுள்ளது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவி “பயங்கரவாத சந்தேகநபர்” என்ற வகுதிக்குள் உள்ளடக்கப்படமாட்டார் என்று கனேடிய நீதிமன்றம் ஒன்று
தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து அவர் நாடு கடத்தப்படும் அபாயம் நீங்கியுள்ளது.
2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று ஜோசப் பராராஜசிங்கம் மட்டக்களப்பின் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதன்போது அவரது மனைவியான சுகுணநாயகி காயமடைந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து அவருக்கு கனடா பாதுகாப்பளிக்கும் நோக்கில் தமது நாட்டில் வசிக்க அனுமதித்தது.
அப்போதைய கனேடிய வெளியுவு அமைச்சர் பில் கிரஹமும், இதற்கான அனுமதியை வழங்கியிருந்தார்.
ஜோசப் பரராஜசிங்கம் சமதானத்துக்கான மனிதர் என்ற நாமத்தையும் சூட்டியிருந்தார்.
எனினும் கனடாவின் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் தமது நிலைப்பாட்டை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சியாகும். எனவே அந்தக் கட்சியின் உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கமும் பயங்கரவாத குழுவின் உறுப்பினராக கருதப்படுகிறார்.
இந்தநிலையில் அவரது மனைவி சுகுணநாயகியும் கணவரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளமையால் அவரும் அந்த வகுதிக்குள்ளேயே அடக்கப்படுகிறார் என்று கனேடிய எல்லைப் பாதுகாப்பு பிரிவு நியாயப்படுத்தியிருந்தது.
எனினும் தற்போது நீதிமன்றம் சுகுணநாயகியின் வயது 76 என்பதை கருத்திற்கொண்டு அவரை தொடர்ந்தும் பயங்கரவாத குழுவின் உறுப்பினர் என்ற வகுதிக்குள் வைத்திருக்க அவசியமில்லை என்று தீர்ப்பளித்துள்ளது.
எனவே அவரை அதில் இருந்து விடுவித்து சிறந்த வாய்ப்பை வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ad

ad