புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014

4ஆம் திகதி பளை வரை யாழ் தேவி வரும்-ஏப்ரலில் யாழ்ப்பாணம்,ஜூனில் காங்கேசன்துறைக்கும் வரவுள்ளது 
கிளிநொச்சியில் இருந்து பளை வரையான ரயில் சேவை 23 வருடங்களுக்கு பின்னர் எதிர்வரும் 4ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக
புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய இர்கொன் நிறுவனத்தினால் வட பகுதிக்கான ரயில் பாதை துரிதகதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது கொழும்பில் இருந்து யாழ் தேவி கிளிநொச்சிவரை சேவையில் ஈடுபட்டுள்ளது.

எனினும் கிளிநொச்சியில் இருந்து பளை வரையான 21 கிலோ மீற்றர் தூர ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதோடு பரந்தன், ஆனையிறவு ரயில் நிலையங்களும் மீள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி உத்தியோக பூர்வமான பளைவரை சேவை இடம்பெறவுள்ளது. இதனை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இந்திய உயர் ஸ்தானிகர் சிங்ஹா ஆகியோர் ஆரம்பித்து வைக்க உள்ளனர்.

மேலும் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை துரித கதியில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் ஏப்ரல் மாதத்தில் யாழ்தேவி   யாழ்ப்பாணம் வரை பயணிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரையான நிர்மாணப் பணிகள்  எதிர்வரும் யூன் மாதம் பூர்த்தி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad