புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014

கோபிராஜின் சாவில் சந்தேகம்; உடல் இன்று யாழ்ப்பாணத்துக்கு
மகஸின் சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான கோபிராஜின் உடல் யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை எடுத்து வரப்படவுள்ளது.
 
அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அவரது சொந்த இடமான வடமராட்சியில் இடம் பெறவுள்ளன.உயிரிழந்த கோபிராஜின் மனைவி, பிள்ளைகள் ஆகியோர் பிரிட்டனிலிருந்து நேற்றுக் கொழும்பு வந்தடைந்தனர்.
 
இந்த மரணம் தொடர்பில் தமக்குச் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.
கோபிதாஸின் சகோதரர் இது குறித்துக் குறிப்பிடுகையில்,
 
நீண்ட திட்டத்துடன் இதனைச் செய்துள்ளனர்.எமக்கு இது தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது. இதற்கு முன்னரும் இவரைக் கொலை செய்ய இரண்டு தடவைகள் முயற்சி செய்தனர்.அது வெற்றியளிக்கவில்லை.இதன் பின்புலத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்தக் கொலை தொடர்பில் எமக்குச் சந்தேகம் இருக்கிறது.
 
கோபிதாஸின் தந்தை தெரிவிக்கையில்,சம்பவம் அறிந்தவுடன் நான் அங்கு சென்றேன்.சிறைச்சாலை அதிகாரிகளின் பேச்சின் மூலம் எனது மகன் உயிரிழந்துள்ளதாக அறிந்துகொண்டேன். சுகயீனத்துக்கு மருந்தைக் கொண்டு போய்க் கொடுத்தாலும் அதிகாரிகள் அதனை எனது மகனிடம் வழங்க மாட்டார்கள்.அவ்வாறான ஓர் அரசே இந்த நாட்டில் உள் ளது - என்றார்.
 
இவரை விடுவிக்க தூதரகம் ஊடாக 7 வருடமாக முயற்சி செய்தேன். எனினும் இன்று எனது கணவரை இவர்கள் கொலை செய்துள்ளனர் என்றார் கோபிதாஸின் மனைவி.
 
தமது நாட்டுப்  பிரஜை ஒருவரின் மரணம் தொடர்பில் தமக்குப் பதிவாகியுள்ளதாகவும், அது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரிட் டன் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
 
கோபிராஜ் மாரடைப்பினாலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவரது உடலில் எந்த அடிகாயங்களும் இல்லை என்றும் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் தம்மிடம் தெரிவித்தாக உறவினர்கள் தெரிவித்தனர்
 
மகஸின் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் திங்கட் கிழமை காலை மலசலகூடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கோபிராஜின், உடற் கூற்றுப் பரிசோதனைகள் நேற்று மாலை இடம்பெற்றன.இதன் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
 
பிரிட்டன் பிரஜையான விஸ்வலிங்கம் கோபிராஜ் (வயது  42) 2007 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பிரிட்டனில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டிக் கைது செய்யப்பட்ட அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
 
2011 ஆம் ஆண்டு வெலிக் கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்த கோபிராஜ், அதன் பின்னர் மகஸின் சிறைச் சாலைக்கு இடமாற்றப்பட்டி ருந்தார்.மகஸின் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்திருந்தார்.
 
அவரது உடலைப்பிரிட்டனுக் குக் கொண்டு செல்வதற்கு உறவினர்களால் முயற்சி எடுக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் நேற்றுக் காலை பிரிட்டனிலிருந்து அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 
 
இதனால் கோபிராஜின் சொந்த ஊரான வடமராட்சிக்கு இன்று சடலம் எடுத்து வரப்படுகின்றது. திர்வரும் ஞாயிற்றுக் கிழமை இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதுடன், நீதி மன்ற உத்தரவுக்கு அமைய சடலம் புதைக்கப்படவுள்ளது.
  
இதேவேளை, மகஸின் சிறையில் உயிரிழந்த கோபிராஜ் மாரடைப்பினாலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவரது உடலில் எந்த அடிகாயங்களும் இல்லை என்றும் உடற் கூற்றுப் பரிசோதனை மேற் கொண்ட மருத்துவர் தம்மிடம் தெரிவித்தாக உறவினர்கள்  'உதயனுக்குத்' தெரிவித்தனர்.
 
மகஸின் சிறைச்சாலையின் "சி' தளத்தின் மேல்மாடியிலுள்ள மலசல கூடத்திலிருந்தே கோபிராஜ் மர்மான முறையில் உயிரிழந்த நிலை யில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
  
கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை மகஸின் சிறைச் சாலையினுள் தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்களா லும், சிங்களக் கைதிகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரும் காயமடைந்திருந்தார். 
 
இந்த நிலையில் கோபிராஜ் சடலமாக மீட்கப்பட்டமை சந்தேகங்களை உருவாக்கியிருந்தது. 
 
நேற்று மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கோபிராஜின் உடற்கூற்றுப் பரிசோதனைகள் இடம்பெற்றன. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கைகள் மார்ச் மாதம் 14 ஆம் திகதி நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர், இதயத்துக்குச் செல்லும் நரம்பு வெடித்ததா லேயே உயிரிழப்பு சம்பவித்ததாகத் தெரிவித்ததாக கோபி ராஜின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ad

ad