நிறைய பக்கங்கள், நிறைய விஷயங்கள்! பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஜெயலலிதா பேட்டி!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் நிறைய பக்கங்கள், நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் உள்ளன. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளன. தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன என்றார்.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை தனது பிறந்தநாளான 24.02.2014 திங்கள்கிழமை ஜெயலலதா அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.