புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014


விப்பிள்ளையின்அறிக்கையைநடைமுறைப்படுத்துகசர்வதேமன்னிப்புச்சபை


சிறீலங்கா மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அனைத்துலக சமூகம் செயற்பட வேண்டும்
என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைமை நிர்வாகி ஆனந்தபத்மநாபன் கூறியதாவது,


இலங்கையில் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நியாயம் வேண்டி நிற்பது வெட்கம் கெட்ட செயல். சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தி நவிபிள்ளை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை முக்கியமானதும் அவசர மற்றும் கசப்பான நினைவூட்டமாகும். இனியும் தாமதிக்க முடியாது.
மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேசம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு செவிசாய்க்காது சர்வதேசத்தின் கண்ணில் மண்ணை தூவும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டு வருவகிறது.
எனவே நவிபிள்ளையின் புதிய அறிக்கை ஒரு கண் திறப்பாக இருக்கட்டும். இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தும் வலுவான பிரேரணை ஒன்றை ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற வேண்டும்.
நவிபிள்ளையின் நிலைப்பாடு எங்களது கருத்துகளுடன் ஒத்துப்போவதாகவும் இலங்கையில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் குறித்து தமக்கு இன்னும் ஆதாரம் கிடைத்த வண்ணமுள்ளதாகவும் ஆனந்தபத்மநாபன் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad