புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014


மக்கள் எழுச்சியோடு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது தமிழ்வான்

24.02.2014 திங்கள் பிற்பகல் 16:00 மணிக்கு நோர்வேயிலிருந்து ஜநா நோக்கிய நீதிக்கான தமிழ்வான் பயணம் நோர்வே பாராளுமன்ற முன்றலில் இருந்து மக்கள் எழுச்சியோடு ஜநாவை நோக்கி நீதி கேட்டு புறப்பட்டுள்ளது.


அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களை இன ஒழிப்பு செய்து இறுதியாக 2009 மிகப்பெரும் போரை உலக நாடுகளோடு இணைந்து நாடாத்தி எமது மக்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்த கோரமுகத்தினை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த கோரியும் தொடர்ச்சியாக இனவாத பூதத்தால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் எமது நிலத்தின் விடுதலையை வலியுறுத்தியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஒஸ்லோவை மையப்படுத்தி மாபெரும் மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை நாடாத்தவேண்டிய அரசியல் தேவை உள்ளதால் ஜநாவின் 25வது கூட்ட தொடருக்கு முன்பாக இந்த போராட்டம் தமிழர் ஒருங்கிணைக்புக்குழுவாலும் மக்கள் அவையாலும் கூட்டாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்தில் சமாதான தூதுவனாக வந்து ஈழத்தமிழ் இனத்துக்கு இரண்டகம் செய்த நோர்வே அரசு எனியாவது சிறீலங்காவின் கோரமுகத்தை கிழித்தெறிந்து தமிழ் இனத்தின் சனநாயக வழியிலான போராட்டத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கவேண்டிய தேவையுள்ளதால் நோர்வேயிலிருந்து தமிழ்வான் தன்னுடைய நீதிக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. இப்போராட்டத்தில் அகவை பேதமின்றி மக்கள் மிக எழுச்சியோடு கலந்துகொண்டனர். குறிப்பாக இளைஞர்களின் பங்கு மிகவும் பாராட்டுதலுக்குரியதாக அமைந்தது..
போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளையில் பாராளுமன்றத்திற்கு உள்ளே பாராளமன்ற உறுப்பினர்களோடு சந்திப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.அத்தோடு சர்வதேச விசாரனையை வலியுறுத்திய அஞ்சல் அட்டை பன்னாட்டு மக்களுக்கு வநியோகிக்கப்பட்டது.
இத்தோடு தமிழ்மக்களின் உணர்வுகளையும் வலியையும் தாங்கிச்செல்லும் தமிழ்வானை ஓட்டிசென்று சுவீடன் டென்மார்க் ஜேர்மனி ஆகிய நாடுகளின் பிரதான நகரங்களில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் சூரி கர்னன் ஆகியோரின் உணர்வு மிக்க கருத்துக்களும் மக்கள் மத்தியில்
இடம்பெற்றதோடு இறுதியாக தமிழரின் தாகம் தமிழீழதாயகம் என்ற தணியாத தாகத்தோடு தமிழ்வான் ஜநாவை நோக்கி நீதி கேட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ad

ad