புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014


கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எம்.பி. பதவி வகிப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
வழக்குரைஞர் ஏ.பெனிட்டோ தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. மனுவில், 2011-ஆம் ஆண்டு ஜமைக்காவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது அளிக்கப்பட்ட
விருந்து நிகழ்ச்சியில் இந்திய தேசியக்கொடி நிறத்திலான கேக்கை சச்சின் டெண்டுல்கர் வெட்டினார். பத்திரிகைகளில் இது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. இது தேசியக்கொடியை அவமதித்த குற்றம் என்பதால் சச்சின் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மேலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. புகார் மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளபோது, சச்சின் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது தவறு. எனவே சச்சின் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், பத்திரிகை செய்தியை ஆதாரமாகக் கொண்டு வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனக் குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

ad

ad