புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014

    அ .தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை 
க்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய ஷரத்துக்கள்.

தமிழக மக்களின் துன்பங்களைப் போக்கும் வகையில், துயர்களைத் துடைக்கும் வகையில், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கும் வகையில், அதிமுக கீழ்க்கண்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறது.
1.  கூட்டுறவு கூட்டாட்சி
கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை நிலைப்படுத்த, செயல்படுத்த, நிலைநிறுத்த, அதிமுகநடவடிக்கை எடுக்கும்.
2.  இலங்கைத் தமிழர் பிரச்சனை
இலங்கை உள்நாட்டுப் போரின் போது, இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி  தண்டனை பெற்றுத் தரவும்; இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும்; தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அனைத்திந்திய அதிமுக உறுதி  பூண்டுள்ளது. 
3.  தமிழக மீனவர் நலன்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால், இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை. தமிழக மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில், இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும். 
ஆழ்கடல் மீன்பிடிப்பு, மீன்பிடி பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும் என்பதால், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கு மத்திய அரசு மூலம் முழு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
கடலோரப் பகுதிகளில் வாழும் தமிழக மீனவர்களின் வளத்தினை உறுதி  செய்யும் வகையில், சென்னை காசிமேடு, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள உள்ள மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்கப்படும். புலிக்கட் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலுள்ள நதி  முகத்துவாரங்கள் முறையாக தூர்வாரப்படும்.
எண்ணூர், கடலூர், பூம்புகார், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி,  திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கடல் அரிப்பு பிரச்சனையை தடுக்கும் வகையில், போதுமான நிதி  ஒதுக்கீடு செய்யப்படும்.
மீனவர்களின் நலன்களைக் பாதுகாக்கும் வகையில் தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் சீரமைக்கப்படும்.
4.  கச்சத்தீவு மீட்பு
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றால், கச்சத்தீவினை மீட்டெடுப்பது தான் ஒரே தீர்வு என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.
தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவினை  திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக எடுக்கும்.
5.  சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற கொள்கையை அதிமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது.  இந்தக் கொள்கையை அகில இந்திய அளவில் அகற்றத் தேவையான நடவடிக்கைகளை கட்சி எடுக்கும். 
6.  தமிழ் ஆட்சி மொழி
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தும்.  இதுவன்றி, சென்னை  உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை கட்சி எடுக்கும்.
7.  அனைவருக்கும் பொது விநியோகத்  திட்டம்
அனைவருக்கும் பொது விநியோகத்  திட்டம் இருக்கின்ற மாநிலங்களில், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத்  திட்டத்திற்குப் பதிலாக அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய பொது விநியோகத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
8.  மண்ணெண்ணெய் ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் மாதத் தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை பெறத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
9.  மின்சார வழித்தடங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஏற்படுத்துதல் 

மின் மிகை மாநிலங்களிலிருந்து மின் குறை மாநிலங்களுக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வகையில், புதிய மின் வழித்தடங்களை அமைக்கவும், வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும். 
10. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுக்கு டிஎச்எஸ் அனுமதி
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு தேவையான டிஎச்எஸ் அனுமதியை பெற அதிமுக நடவடிக்கை எடுக்கும்.  இதே போன்று, இந்திய அளவில் மாநில அரசுகள் கேபிள் டி.வி. சேவை வழங்குவது ஊக்குவிக்கப்படும்.
11.  காவேரி மேலாண்மை வாரியம்
 காவேரி நடுவர் மன்ற இறுதி  ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு, ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியும், காவேரி நீரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு  திறந்து விடுவதைக் கண்காணிக்க தேவையான காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை. இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
12.  மதச்சார்பின்மை
மதச்சார்பின்மை கொள்கையை  நிலைநாட்டவும், மேம்படுத்தவும், அதிமுக பாடுபடும்.
13.  சமூக நீதி
சமூக மற்றும் பொருளாதார ரீதி யில் பின்தங்கியவர்களுக்கு சம வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க ஏற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தொடர்ந்து நிலைநாட்ட அதிமுக பாடுபடும்.
14.  மகளிர் நலன்
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்த அதிமுக பாடுபடும். 
15.  மகளிர் இடஒதுக்கீடு
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
16.  நதிகள் இணைப்பு மற்றும் தேசியமயமாக்கம்
ஆறுகளும் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும். நதிகள் நாட்டுடைமை ஆக்கப்படுவதற்கும், நதிகளை இணைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
17.  பொதுத் துறை நிறுவனப் பங்குகள்
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு  விற்கப்படாமல் இருப்பதை அதிமுக உறுதி  செய்யும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் முற்றிலும் நிறுத்தப்பட அதிமுக பாடுபடும். 
18.  வெளியுறவுக் கொள்கை
வெளியுறவுக் கொள்கை என்பது மாநில நலன்களுக்கு எதிராக அமையக் கூடாது. எனவே, மாநில நலன்களை உள்ளடக்கிய வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்படும்.
19.  பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயத்தை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளையும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை  திரும்பப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும்  அதிமுக எடுக்கும். அதே போல்,
20.  கருப்புப் பணத்தை மீட்டெடுத்தல்
அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய ஆட்சி உருவாக்கப்படின், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் பல லட்சம்  கோடி ரூபாய் பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
21.  பிற நாடுகளுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் குறித்து ஆய்வு
வரி தவிர்ப்பு என்ற போர்வையில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இந்திய நாட்டின் வருவாயைப் பெருக்கவும் வழிவகை செய்யப்படும்.
22.  தொலைநோக்குத்  ட்டம் 2023
தமிழ்நாடு தொலைநோக்குத்  திட்டம் 2023–ஐ போன்றதொரு  திட்டத்தை இந்தியா முழுமைக்கும் தீட்டி, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
23.  சிறுபான்மையினர் நலன்
சிறுபான்மையினர் சுயதொழில் புரியும் வகையில், தொழில் தொடங்குவதற்கு அதிக அளவில் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
நீண்ட நாள் கோரிக்கையான மதம் மாறிய ஆதி திராவிடர்களை அட்டவணைப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
24.  முதியோர் நலன்
வயது வரம்பின்றி அனைத்து முதியோரும் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது போல, அகில இந்திய அளவில் நிறைவேற்ற அதிமுக நடவடிக்கை எடுக்கும். 
25.     மாற்றுத் திறனாளிகள் நலன்
வருமான வரிச் சட்டம் பிரிவு 80 டிடி-ன்கீழ் மாற்றுத்  திறனாளிகள் மற்றும் அவரது குடும்பங்களுக்கு அளிக்கப்படும் சலுகை 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படவும், பொதுக் கட்டடங்களில் உள்ள அலுவலகங்களை மாற்றுத்  திறனாளிகள் எளிதில் அணுகுவதை உறுதி  செய்யும் வகையிலும், சாய்தளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சில வாக்குறுதிகள்...
29.    தனி நபர் வருமான வரி
சாதாரண மக்களுக்கு ஓரளவு பயனளிக்கும் வகையில், 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறும் தனி நபருக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க அதிமுக நடவடிக்கை எடுக்கும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad