புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014


அட்டாக் பாண்டி சொத்துக்கள் முடக்கம்:போலீஸ் அதிரடி நடவடிக்கை

மதுரை பொட்டு சுரேஷ் கொலையில், ஓராண்டிற்கும் மேலாக தலைமறைவாக உள்ள அட்டாக் பாண்டியின் சொத்துக்களை போலீசார் முடக்கியுள்ளனர். 'பினாமி' பெயர்களில் உள்ள சொத்துக்களையும்
முடக்க முடிவு செய்துள்ளனர்.


மதுரையில், கடந்த ஆண்டு ஜன.,31ல், 'பொட்டு' சுரேஷ் கொல்லப்பட்டார். இவ்வழக்கில், முதல் குற்ற வாளியான முன்னாள் தி.மு.க., வேளாண் விற்பனை குழுத் தலைவர் 'அட்டாக்' பாண்டி, தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை 'தேடப்படும் குற்றவாளியாக' அறிவித்தும், இன்னும் சிக்கவில்லை.


இந்நிலையில், அவரது சொத்துக்களை முடக்க அனுமதி கேட்டு மதுரை ஜே.எம். கோர்ட் 4ல், சுப்பிர மணியபுரம் போலீசார் மனு செய்தனர்.


விசாரித்த மாஜிஸ்திரேட் கோவிந்தராஜன், 'அட்டாக்' பாண்டி பெயரில் உள்ள சொத்துக்களை மட்டும் முடக்கம் செய்ய அனுமதி வழங்கினார். சொத்துக்களை முடக்கும் அதிகாரம் மாவட்ட நிர்வாகத் திற்குட்பட்டது என்பதால், கலெக்டர் சுப்பிரமணியத்திற்கும், டி.ஆர்.ஓ., சிற்றரசுக்கும் போலீசார் பரிந்து ரைத்துள்ளனர்.


இது குறித்து போலீசார்,  ‘’மதுரை கீரைத்துறையில், 2009ல் செயல்பட்ட 'ஜெயம் ரியல்ஸ் அண்ட் ஜெம்ஸ்' நிதிநிறுவனம், ரூ.1.94 கோடி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், 5வது குற்றவாளி 'அட்டாக்' பாண்டி. இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட அவர், தனது சொத்துக்களை குடும்பத்தினர், உறவினர்கள் பெயரில் எழுதி வைத்தார். வங்கி பரிவர்த்தனையையும் குறைத்துக் கொண்டார்.அந்த மோசடி வழக்கில், ரூ.75 லட்சம் 'அட்டாக்' பாண்டி தரப்பினரிடமிருந்து மீட்டு, கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, அந்த தொகை டி.ஆர்.ஓ., கணக்கில் பாதுகாக்கப்படுகிறது.


இவ்வழக்கில், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில்தான், 'பொட்டு' சுரேஷ் கொலையில் அவர் சிக்கினார். தற்போது அவரது பெயரில், வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 50 சென்ட் இடம், நல்லுாரில் 8 ஏக்கர் நிலம், ஒரு ஸ்கார்ப்பியோ கார் மற்றும் நான்கு வங்கிகளில் இருப்பு 20 ஆயிரம் ரூபாய் உள்ளது. அதை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அவரது 'சம்பாத்தியத்தில்' கிடைத்த சொத்துக்கள், 'பினாமி' பெயரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதையும் முடக்க அனுமதி கேட்டு, கோர்ட்டில் மனு செய்ய உள்ளோம். அந்த சொத்துக்கள், தங்களது சுயசம்பாத்தியம் என நிரூபிக்க வேண்டியது, 'அட்டாக்' பாண்டி உறவினர்களின் பொறுப்பு. இவ்வாறு கூறினர்.

ad

ad