புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக தொடர அனுமதி கோரி முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


6வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்துவதற்காக முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான 3 பேர் கொண்ட கமிட்டியை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, அந்தக் கமிட்டி 170 பக்கம் கொண்ட அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து சூதாட்ட விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என்பதற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீனிவாசன் விலக வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், கவாஸ்கரை இடைக்கால தலைவராக நியமித்தது.

இதனிடையே, வாக்குமூல விவரங்களைக் கோரி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியில் தொடர அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீனிவாசன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை கடந்த மாதம் 16ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள், சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய முட்கல் கமிட்டியின் அறிக்கையில் ஸ்ரீனிவாசன் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு முடியும் வரை ஸ்ரீனிவாசன் பி.சி.சி.ஐ தலைவராக முடியாது என்றும், பி.சி.சி.ஐ.- க்குள் எவ்வித செயல்பாட்டையும் மேற்கொள்ளக்கூடாது என்றும்  திட்டவட்டமாக கூறியிருந்தனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியில் தொடர அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீனிவாசன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த விடுமுறைகால அமர்வு, தடை விதித்த அமர்விடமே முறையிடுமாறு உத்தரவிட்டது.

ad

ad