புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014


 சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் 10.5 கிலோ தங்கம்

சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்திருந்த 10.5 கிலோ தங்க பிஸ்கட்டுகளை சுங்க அதிகாரிகள் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



விமான நிலையத்திற்குள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட துப்புரவு ஊழியர் ஒருவர், ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு பிளாஸ்டிக் பை அழுத்தி வைக்கப்பட்டிருந்ததை பார்த்தார். சந்தேக மடைந்த அவர் அந்த பையை எடுத்து பார்த்தபோது அதில் தங்க பிஸ்கட்டுகள் இருந்தன. இதுபற்றி சுங்க அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார்.
உடனே சுங்க அதிகாரிகளும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகளும் அங்கு வந்து 10.5 கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி ஆகும். இந்த தங்கத்தை வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்து, அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் இருக்க இவ்வாறு குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ad

ad