புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014

ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை: பாஜக விளக்கம்

அன்று மன்மோகன் சிங் அழைத்திருந்தது கொலைகாரன் வைத்திருந்த கத்திக்கு சமம் என்றும், இன்று நரேந்திர மோடி அழைத்திருப்பது மருத்துவர் வைத்திருக்கும் கத்திக்கு சமம் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பா.ஜனதா நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்,  வரும் 26ஆம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்குமாறு இலங்கை, பாகிஸ்தான் உள்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் ரத்தக்கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் ராஜபக்சே நுழைவதை எந்தவிதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள இயலாது" என்று கூறியிருந்தார்.

கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இது குறித்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என்றும், இலங்கைத் தமிழர்களின் நலன் கருதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அன்று மன்மோகன் சிங் அழைத்திருந்தது கொலைகாரன் வைத்திருந்த கத்திக்கு சமம் என்றும், இன்று நரேந்திர மோடி அழைத்திருப்பது மருத்துவர் வைத்திருக்கும் கத்திக்கு சமம் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ad

ad