புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2015

முன்னாள் ரஷ்ய அழகுராணியை திருமணம் செய்த டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா

840750உலகப் புகழ்­பெற்ற சிரேஷ்ட டென்னிஸ் வீராங்­க­னையான மார்ட்­டினா நவ­ரத்­தி­லோவா 58 வயதில் திரு­மணம் செய்­து ­கொண்­டுள்ளார்.
அவர் திரு­மணம் செய்­து­கொண்­டி­ருப்­பது மற்­றொரு பெண்ணை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.தான் ஒரு ஓரின சேர்க்­கை­யாளர் என பல வரு­டங்­க­ளுக்கு முன்­னரே பகி­ரங்­க­மாக அறி­வித்துக் கொண்­டவர் மார்ட்­டினா நவ­ரத்­தி­லோவா.இந்­நி­லையில் ரஷ்­யாவின் முன்னாள் அழ­கு­ரா­ணி­களில் ஒரு­வ­ரான ஜூலிய லெமி­கோ­வாவை (42) மார்ட்­டினா திரு­
மணம் செய்­து­ கொண்­டுள்ளார்.
செக்­கஸ்­லோ­வாக்­கி­யா வில் பிறந்து அமெ­ரிக்­கா வில் குடி­யே­றிய மார்ட்­டினா நவரத்திலோவா 18 ஒற்றை யர் கிராண்ட்ஸ்லாம் பட்டங் கள், 31 முக்கிய மகளிர் இரட்டை யர் பட்டங்கள், 10 கலப்பு இரட்டையர் பட்டங்கள் உட்பட 59 பட்டங்840752களை வென்று சாதனை படைத்தமை840751 குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 1990 ஆம் ஆண்டு மிஸ் சோவியத் யூனியன் அழ­கு­ராணி­யாக தெரி­வான ஜூலியா, 1991 ஆம் ஆண்டு மிஸ் யூ840756னிவர்ஸ் போட்­டியில் பங்­கு­பற்றி 3 ஆம் இடத்தைப் பெற்­றவர்.சோவியத் அழ­கு­ரா­ணி­யாக தெரி­வான பின்னர் மேற்கு ஐரோப்­பா­வுக்கு இடம்­பெயர்ந்த ஜூலியா, பிரான் ஸின் தலை­நகர் பாரிஸில் வசிக்க ஆரம்­பித்தார்.அங்கு அழ­கு­சா­தன பொருட்கள் வர்த்­தக நிறு­வ­ன­மொன்­றையும் அவர் ஸ்தாபி த்தார்.
1997 ஆம் ஆண்டு பிரான்ஸின் செல்­வந்த வங்கி அதி­கா­ரி­களில் ஒரு­வ­ரான எடோர்ட் ஸ்டேர்னை காத­லிக்க ஆரம்­பித்த ஜூலியா லெமி­கோவா 1999 ஆம் ஆண்டு ஆண் குழந்­தை­யொன்­றுக்கு தாயானார்.அக்­கு­ழந்­தையின் தந்தை யார் என்­பது தொடர்­பாக ஜூலி­யா­வுக்கும் ஸ்டேர்­னுக்கும் இடையில் மோதல் ஏற்­பட்­டது. அதே­வேளை 6 மாத வயதில் மூளையில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக அக்­கு­ழந்தை இறந்­தது.அவ்­வே­ளையில் ஸ்டேர்னின் பாது­காப்பில் அக்­கு­ழந்தை இருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.
2005 ஆம் ஆண்டு சுவிட்­ஸர்­லாந்தின் ஜெனீவா நக­ரி­லுள்ள எடோர்ட் ஸ்டேர்னின் தொடர்­மாடி குடி­யி­ருப்பில் ஸ்டேர்ன் துப்­பாக்­கியால் சுடப்­பட்டு உயி­ரி­ழந்த நிலையில் காணப்­பட்டார்.விப­சாரி ஒரு­வரால் அவர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.அதன் பின்னர் இரு பெண் குழந்­தை­க­ளுக்கு ஜூலியா லெமி­கோவா தயானார். அக்­கு­ழந்­தை­களின் தந்தை யார் என்­பது அறி­விக்­கப்­பட­வில்லை.
இந்நிலையில் 1997 ஆம் ஆண்டு டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவாவும் ஜூலியா லெமிகோவாவுக்கும் இடை840754யில் ஒரு பாலினக் காதல் ஏற்படத் தொடங்கியது.நீண்­ட­கா­ல­மாக காத­லித்து வந்த இவ்­வி­ரு­வரும் கடந்த மாதம் 15 ஆம் திகதி நியூயோர்க்கில் வைத்து திரு­மணம் செய்­து­கொண்­டுள்­ளனர். தான் ரஷ்­யாவில் இருந்த காலத்தில் ஒரு பாலினத் திரு­மணம் குறித்து கேள்­விப்­பட்­டி­ருக்­க­வில்லை என ஜூலியா கூறு­கிறார். “நான் லண்­ட­னுக்கு இடம்­பெ­யர்ந்­த­போது 17, 18 வய­தாக இருந்­தது.அது­வரை உலகில் ஒருபாலின உற­வுகள் குறித்து நான் அறிந்­தி­ருக்­க­வில்லை” என்­கிறார் ஜூலியா.ஆனால் இப்­போது அவரே ஒருபாலின திரு­மணம் செய்­து­கொண்­டுள்ளார்.
இத்­ தி­ரு­ம­ணத்­துக்­காக தனது இரு மகள்­க­ளான விக்­டோ­ரியா (13), எம்மா (8) ஆகி­யோரின் சம்­ம­தத்தைப் பெறு­வ­தற்­காக கடும் பிர­யத்­தனம் மேற்­கொண்­டாராம் ஜூலியா.உங்­க­ளுக்கு ஒரு புது தாய் கிடைக்கப் போகிறார் என தனது மகள்­களி டம் ஜூலியா கூறி­னாராம்.
மார்ட்­டி­னாவும் ஜூலி­யாவும் ஆங்­கி­லத்தில் உரை­யா­டு­கின்ற­ போ­திலும் ஜூலி­யாவின் மகள் கள் பிரெஞ்சு மொழி­பே­சு­பவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது

ad

ad