புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2015

அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை : அன்பழகன் தரப்பு வாதம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றவேண்டுமென திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் கோரப்பட்டது.

அதற்கு நீதிபதி குமாரசாமி,  ‘’அரசு வழக்கறிஞராக உங்களை நியமிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?   அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டுமெனில் கர்நாடக அரசிடம் சென்று முறையிடுங்கள்.  தவிர,  ஜெயலலிதா மேல்முறயீட்டு விசாரணையில் தொடர்ந்து இது போன்று குறுக்கீடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும்.  அன்பழகன் நேரில் ஆஜராக வேண்டியது வரும்.  நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள்’’ என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அன்பழகன் தரப்பு,  ‘’அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை.   க.அன்பழகனுக்கு 92 வயது ஆவதால் நேரில் ஆஜராக முடியாது’’என்று தெரிவித்தது.  

பின்னர் நீதிபதி குமாரசாமி ,   ‘’பவானி சிங்கை நீக்கக்கோரிய மனுவை நீதிமன்ற பதிவுத்துறையிடம் தாக்கல் செய்யுங்கள்’’ என்று கூறினார்.

’’பதிவுத்துறையிடம் மனு அளிக்கிறோம்’’ என்றனர் அன்பழகன் தரப்பினர்.

ad

ad